Realme தான் இனி மார்க்கெட் ராஜா.. 218 கிராம் எடையில் 10000mAh பேட்டரி கொண்ட புதிய போன்.. என்ன மாடல்?
ரியல்மி (Realme) நிறுவனம் ஆனது கூடிய விரைவில் 10000mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ரியல்மி பி4 பவர் (Realme P4 Power) என்கிற மாடல் பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் வண்ணம், ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளன. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் டிமன்சிட்டி 7400 (Dimensity 7400) சிப்செட் உடன் வரலாம். கிராபிக்ஸ்காக இது மாலி-G615 MC2 ஜிபியு உடன் இணைக்கப்படலாம்.

12ஜிபி ரேம் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும் ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 7 (Realme UI 7) உடன் வெளியாகலாம். ரியல்மி நிறுவனத்தின் இந்த 10000mAh பேட்டரி ஸ்மார்ட்போன் ஆனது 3 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களையும், 4 வருட செக்யூரிட்டி பேட்ச்களையும் பெறலாம்.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனானது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5கே ரெசல்யூஷன் உடனான குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 80W வயர்டு சார்ஜிங், 27W ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் என்றும், இது ஆரஞ்சு, சில்வர் மற்றும் ப்ளூ ஆகிய கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பேட்டரியை வைத்திருந்தாலும், இது சுமார் 218 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 2 அறிமுகமாகும் ரியல்மி 16 5ஜி: இது கூகுள் பிக்சல் போன்கள் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோன் ஏர் ஆகியவற்றில் காணப்படும் அதே டிசைன் லேங்குவேஜை பின்பற்றி, பேக் பேனலில் "கிடைமட்டமாக" உட்பொதிக்கப்பட்ட கேமரா பார்-ஐ கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சுவாரசியமாக ரியர் கேமராக்களுக்கு அடுத்ததாக ஒரு பிரத்யேக செல்பீ கிளாஸையும் ஒருங்கிணைக்கிறது.
ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் மென்மையான 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும் 6.57-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பேனல் 4,500 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸை வழங்கும் என்று கூறப்படுகிறது.
கூடவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது AGC DT-Star D+ ஷீல்ட் கிளாஸால் பாதுகாக்கப்படுகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இது இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி 16 ஸ்மார்ட்போன் ஆனது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 50 மெகாபிக்சல் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது
பின்புறத்தில், இது 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸுடன் இணைக்கப்பட்ட 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட டூயல் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 7 உடன் வரும். சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனை இயக்குவது மீடியா டெக் டைமன்சிட்டி 6400 டர்போ சிப்செட் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம் உடன் கிடைக்கும், இது 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக ஸ்டோரேஜ் விரிவாக்கமும் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் பெரிய 7,000 எம்ஏஎச் பேட்டரி ஆகும், இது 60W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.


Click it and Unblock the Notifications








