நேரடியாக சாம்சங் உடன் போட்டி.. Realme அறிமுகம் செய்யும் அந்த ஸ்மார்ட்போன் இதுதான்!

|

Realme 10 சீரிஸ் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் அடுத்த சிறிது காலத்திலேயே இந்தியா உட்பட உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ரியல்மி 10 சீரிஸ் நவம்பர் 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நேரடியாக சாம்சங் இன் ப்ரீமியம் ஸ்மார்ட்போனுக்கு சவால் விடும் வகையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ரியல்மி 10 குறித்த முக்கிய தகவல்

ரியல்மி 10 குறித்த முக்கிய தகவல்

Realme 10 சீரிஸ் இல் வெண்ணிலா ரியல்மி 10, ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ+ ஆகிய மாடல்கள் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு நெருங்கி வரும் நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

ரியல்மி 10 சீரிஸ் வெளியீட்டு தேதி

ரியல்மி 10 சீரிஸ் வெளியீட்டு தேதி

ரியல்மி நிறுவனம் ப்ரீமியம் தர அம்சங்கள் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் பின்னர் இந்தியா உட்பட பிற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ரியல்மி 10 சீரிஸ் வெளியீட்டு தேதி மற்றும் நேரத்தை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை இருப்பினும் வெளியாகும் தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

உலகளவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு

உலகளவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு

நவம்பர் 3 முதல் நவம்பர் 5 வரை 10வது சீனா மொபைல் குளோபல் பார்ட்னர் மாநாட்டில் Realme ஒரு நிகழ்வை நடத்துகிறது என போஸ்டர் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்வில் தான் நிறுவனம் ரியல்மி 10 தொடரை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றாலும் நவம்பர் 2022 வெளியீட்டு நிகழ்வு "வேர்ல்ட் பிரீமியர்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரியல்மியின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இதுவாகும். வேர்ல்ட் என குறிப்பிடப்பட்டிருக்கும் காரணத்தால் இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்லிய பெசல்கள் கொண்ட ஸ்மார்ட்போன்

மெல்லிய பெசல்கள் கொண்ட ஸ்மார்ட்போன்

லீக்கர் ஐஸ் யுனிவர்ஸ், ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த கசிவுப் படத்தை வெளியிட்டிருக்கிறது. மேலும் அதில் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது சின் பெசல்கள் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

அதாவது ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 2.3 மிமீ பெசல்களைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேசமயத்தில் தற்போதுவரை மெல்லிய பெசல்கள் கொண்ட ஸ்மார்ட்போனாக சாம்சங் இருக்கிறது.

சாம்சங் ஸ்மார்ட்போனை விட மெல்லிய பெசல்கள்

அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது 2.6 மிமீ பெசல்களைக் கொண்டிருக்கிறது. அதைவிட மெல்லிய பெசல்களை ரியல்மி 10 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ரியல்மி 10 மற்றும் ரியல்மி 10 ப்ரோ+

ரியல்மி 10 மற்றும் ரியல்மி 10 ப்ரோ+

ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்த போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு குறித்து தெரியவந்தது. ரியல்மி 10 சீரிஸ் இல் ரியல்மி 10 மற்றும் ரியல்மி 10 ப்ரோ+ ஆகியவை அடங்கும் என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது. வெளியான தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த தகவலை பார்க்கலாம்.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்

ரியல்மி 10 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் டிஸ்ப்ளே உடன் 4 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

அதேபோல் இதில் 50 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமராவும் 5000 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இவை அனைத்தும் தகவல்களே, நிறுவனத்தின் தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 10 series Might be Launching With slimmer bezel than this Samsung Premium Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X