மொத்த போனும் க்ளோஸ்! ரூ.25,000க்கு வளைந்த டிஸ்ப்ளே, 108 எம்பி கேமரா உடன் Realme 10 Pro+

|

ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நவம்பர் 2022 இல் சீனாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது நிறுவனம் இதன் சீரிஸ் இல் இடம்பெற்ற ரியல்மி 10 ப்ரோ+ மற்றும் ரியல்மி 10 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவில் டிசம்பர் 8 2022 அன்று வெளியிடப்பட உள்ளது. Realme India VP மாதவ் ஷெத் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து டீஸ் செய்யும் வகையிலான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Realme 10 Pro+

Realme India VP மாதவ் ஷெத் பகிர்ந்த வீடியோவில் உள்ள தகவலை பார்க்கலாம். Realme 10 Pro+ இந்தியாவில் ரூ.25,000க்கு கீழ் வெளியிடப்படலாம். இந்த ஸ்மார்ட்போனுக்கு வங்கிச் சலுகைகள் இருக்குமா அல்லது அறிமுக சலுகை கிடைக்குமா என்பது இதுவரை தெரியவில்லை. மலிவு விலையில் வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவலை தற்போது பார்க்கலாம்.

மிட்ரேன்ஜ் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்

மிட்ரேன்ஜ் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்

ப்ரீமியம் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வளைந்த டிஸ்ப்ளே அம்சம் இடம்பெற்று வந்தது. இந்த நிலையில் மிட்ரேன்ஜ் விலைப் பிரிவில் வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டு வட்ட வடிவு கேமரா உடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.

12 ஜிபி ரேம்

12 ஜிபி ரேம்

Realme 10 Pro+ ஸ்மார்ட்போனானது முழு எச்டி+ தெளிவுத் திறன் உடன் கூடிய 6.7 இன்ச் வளைந்த அமோலெட் பேனல் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

டிஸ்ப்ளேயில் மையத்தில் துளை பஞ்ச் கேமரா கட்அவுட் இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக்கின் சமீபத்திய டைமன்சிட்டி 1080 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது மிட் ரேன்ஜ் சிப்செட் ஆகும்.

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் இதே சிப்செட் மூலமாக தான் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது டைமன்சிட்டி 920 எஸ்ஓசி இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். 12 ஜிபி ரேம் ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

108MP பிரதான கேமரா

108MP பிரதான கேமரா

Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இதில் 108MP Samsung ISOCELL HM6 முதன்மை சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் ஆனது OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) ஆதரவைக் கொண்டிருக்கும். அதேபோல் 8MP அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா ஆதரவு இடம்பெறும் என கூறப்படுகிறது.

செல்பி மற்றும் வீடியோ அழைப்பு ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்

டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்

பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்பீக்கர்கல், ஹை ரெஸ் ஆடியோ, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை இணைப்பு ஆதரவுகளாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

புதிய ரியல்மி ஸ்மார்ட்போனானது Android 13 OS அடிப்படையிலான ரியல்மி யுஐ 4.0 மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி சிப்செட்

ரியல்மி நிறுவனம் Realme 10 Pro+ மற்றும் Realme 10 Pro ஸ்மார்ட்போன்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் அறிவித்தது. டாப் ஆஃப் தி லைன் மாடலாக Realme 10 Pro+ வெளியாகி இருக்கிறது. இதில் 6.7 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் கூடிய 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 2,160Hz பல்ஸ்-வித்த் மாடுலேஷன் (PWM) மற்றும் 800 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ரியல்மி சமீபத்தில் Realme 10 4G மற்றும் Realme 10 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

Realme 10 Pro+ விலை

Realme 10 Pro+ விலை

Realme 10 Pro+ விலை குறித்து பார்க்கலாம். Realme 10 Pro+ ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,699 (தோராயமாக ரூ.19,500) என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,999 (தோராயமாக ரூ.23,000) மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் CNY 2,299 (தோராயமாக ரூ.26,500) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அதீத எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்

அதீத எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்

இந்த ஸ்மார்ட்போனானது நைட், ஓஷன் மற்றும் ஸ்டார் லைட் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. பக்கா ப்ரீமியம் 5ஜி போனை மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் வாங்கலாம். ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. ரியல்மியின் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 8 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. அனைத்து மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்கும் இது கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 10 Pro+ with curved AMOLED display to launch in India under Rs.25,000 on December 8

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X