Home
Mobile

அதிருது ஆஃபர்.. வெறும் ரூ.19,949 போதும்.. 108MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையை (Flipkart Big Billion Days Sale) முன்னிட்டு 108எம்பி கேமரா, கர்வ்ட் ஓஎல்இடி டிஸ்பிளே, 67W சார்ஜிங், 5000mAh போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட ரியல்மி 10 ப்ரோ பிளஸ் போனுக்கு அதிரவைக்கும் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 10 Pro Plus Specifications): இந்த போன் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு 61 டிகிரி கர்வ்ட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும்.

ரூ.19,949 போதும்.. 108MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங் போன்!

இந்த டிஸ்பிளே 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் சப்போர்ட் வருகிறது. இந்த ரியல்மி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 1080 6nm) சிப்செட் மற்றும் மாலி-ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் (Realme UI 4.0 OS) சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. டூயல் நானோ சிம் கார்டு சிலாட் வருகிறது. இந்த போனில் மூக்கில் விரல் வைக்குமபடியான ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சார் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஜிகோ மைக்ரோ ஜிசி02எம்1 (Geco Micro GC02M1) சென்சார் கொண்ட 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதேபோல சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. இந்த பேட்டரியோடு சேர்த்து, வெறும் 173 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

5ஜி (5G), டூயல் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடலில் ஹைப்பர்ஸ்பேஸ் (Hyperspace), டார்க் மேட்டர் (Dark Matter) மற்றும் நெபுலா ப்ளூ (Nebula Blue) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் ரூ.24,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.25,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.27,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின்பு 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.20,999ஆக குறைக்கப்பட்டு விற்பனைகு வந்தது.

இப்போது, இந்த விலையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையை முன்னிட்டு ரூ.1,050 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். அதோடு ரூ.20,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.19,949க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 10 Pro Plus Under Rs 20000 With Offer in Flipkart Big Billion Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X