துணிந்து இறங்கும் Realme: வளைந்த டிஸ்ப்ளே உடன் ஸ்மார்ட்போன் சரி.. விலை இவ்வளவு தானா?

|

Realme 10 Pro+ ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன சான்றிதழ் வலைதளமான TENAA இல் பட்டியலிடப்பட்டிருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற தோற்றம் குறித்த தன்மையும் வெளியானது. இந்த நிலையில் ரியல்மி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக ரியல்மி 10 ப்ரோ+ குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனுடன் வெளியிடப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ரியல்மி 10 ப்ரோ+ மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

அறிமுக தேதி எப்போது?

அறிமுக தேதி எப்போது?

Realme ஸ்மார்ட்போனின் முன் வடிவமைப்பைக் காண்பிக்கும் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதியும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது நவம்பர் 17 2022 அன்று அதன் சொந்த நாடான சீனாவில் அதிகாரிப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிட் ரேன்ஜ் விலையில் வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளே

மிட் ரேன்ஜ் விலையில் வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளே

Realme 10 Pro+ ஆனது ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஒத்த அதிக அம்சங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தில் பிரதானமாக அதன் டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Realme 10 Pro+ ஸ்மார்ட்போனில் பிளாட் டிஸ்ப்ளே இருக்கும் எனவும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் இருப்பது போன்ற வளைந்த டிஸ்ப்ளே இதில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. பக்கா மிட் ரேன்ஜ் விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக அதிக வாய்ப்பிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்ப்பு

கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்ப்பு

ரியல்மி நிறுவனம் Realme 10 Pro+ குறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஸ்மார்ட்போன் முன்புற தோற்றத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறது. இந்த புகைப்படத்தின் மூலம், ஸ்மார்ட்போனில் வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளேக்கள் இருக்கும் என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு விட்டது.

மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளே என்பது அரிது. எனவே இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் விலைப்பிரிவில் உள்ள பிற ஸ்மார்ட்போன்களுடன் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்

பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்

வளைந்த டிஸ்ப்ளே என்பது ஸ்மார்ட்போனின் தோற்றத்தையும் உணர்வையும் மேம்படுத்துகிறது. ஆனால் இது போன்ற டிஸ்ப்ளேக்களை மிகவும் பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

Realme 10 Pro+ அம்சங்கள்

Realme 10 Pro+ அம்சங்கள்

Realme 10 Pro+ குறித்து வெளியான தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பில் இரண்டு கேமரா வளையங்கள் இருக்கும் எனவும் அதில் டிரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சிம் கார்ட் ஸ்லாட், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கீல் உள்ளிட்டவைகள் டீஸர் படத்தில் காட்டப்படுகின்றன.

பஞ்ச் போல் கேமரா உறுதி

பஞ்ச் போல் கேமரா உறுதி

Realme 10 Pro+ குறித்து வெளியான தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடனான பெரிய 6.7 இன்ச் வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளேக்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. பஞ்ச் போல் கேமரா கட்அவுட் உடன் இந்த ஸ்மார்ட்போன் வரும் என்பதை ரியல்மி உறுதிப்படுத்தி இருக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 ஆக்டோ கோர் சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் வரை அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் OIS ஆதரவுடன் 108எம்பி முதன்மை கேமரா இடம்பெறும் எனவும் 8MP அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2MP டெப்த் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உடன் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme 10 Pro+ Launching date Confirmed: A curved OLED smartphone at a midrange price!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X