புதுசா போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Realme 10 சீரிஸ் வருகிறது.!

|

Realme நிறுவனம் அதன் Realme 10 வரிசை ஸ்மார்ட்போன்களை இந்தியா, சீனா ஐரோப்பா மற்றும் பிற ஆசிய நாடுகள் உட்பட பல்வேறு ஸ்மார்ட்போன் சந்தைகளில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

இந்த வரிசையில் வெண்ணிலா Realme 10, Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro+ 5G ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் நவம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய Realme 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய Realme 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக, பிராண்டின் VP மற்றும் Realme இன்டர்நேஷனல் தலைவரான மாதவ் ஷெத், Realme 10 ஸ்மார்ட்போன் குறித்த சில முக்கிய விவரக்குறிப்புகளை ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் படி, வரவிருக்கும் புதிய Realme 10 ஸ்மார்ட்போன் ஆனது நவம்பர் 9, 2022 இல் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரியல்மி 10 சீரிஸ் வரிசையில் எத்தனை மாடல்கள் வருகிறது?

ரியல்மி 10 சீரிஸ் வரிசையில் எத்தனை மாடல்கள் வருகிறது?

ரியல்மி நிறுவனம் வெளியீட்டை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் லீக் தகவல்களின் குறிப்பு படி, இந்த புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என்பதைப் பரிந்துரைக்கிறது.

இவை இரண்டும் 5ஜி மாடல்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன் 5ஜி இணக்கம் இல்லாமல், 4ஜி சேவையில் இயங்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

ரியல்மி 10 தொடரில் வரவிருக்கும் Realme 10 4G ஸ்மார்ட்போன் 180Hz டச் சாம்பிளிங் மாதிரி விகிதத்துடன் 6.5' இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறுகிறார்.

இந்த டிஸ்பிளே 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வரும் என்று கூறப்படுகிறது. ஸ்கிராட்ச் மற்றும் டிராப்ஸ் சேதத்திற்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பை வழங்க டிஸ்பிளே பாண்டா கிளாஸ் அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் உடன் வருகிறதா?

புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் உடன் வருகிறதா?

இந்த புதிய ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 99 சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 50MP பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் உடன் வரும். இந்த சாதனம் 16MP முன்பக்க கேமராவையும் கொண்டிருக்கிறது.

இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்யும் என்று குக்லானி தெரிவித்திருக்கிறார். Realme 10 டிவைஸ் 8 + 8 என்று மொத்தமாக 16 ஜிபி ரேம் வரை இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?

Realme 10 ஸ்மார்ட்போன்களில் என்ன எதிர்பார்க்கலாம்?

Realme 10 ஸ்மார்ட்போன்களில் என்ன எதிர்பார்க்கலாம்?

இருப்பினும், இந்த புதிய ஸ்மார்ட்போனில் LPDDR4x ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் அம்சம் இடம்பெறுவது உறுதி என்று சமீபத்திய தகவல் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் ரேம் அம்சத்திற்கு மேல் 5ஜிபி வரை எக்ஸ்டர்னல் ரேம் ஆதரவும் கிடைக்கும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.

இந்த Realme ஸ்மார்ட்போனின் டிசைன் ரெண்டர்கள் சில தினங்களுக்கு முன் இணையத்தில் லீக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இது 4ஜி போனா? அல்ல இது 5ஜி போனா?

இது 4ஜி போனா? அல்ல இது 5ஜி போனா?

நமக்குக் கிடைத்த ஹார்டுவேர் தகவலை வைத்துப் பார்க்கையில், இந்தியாவில் Realme 10 4G விலை ரூ.16999 விலையில் வரலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆரம்ப சலுகைகளுடன், அடிப்படை மாடலின் விலை சுமார் ரூ.15,000 என்ற விலையில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பு அம்சம் இல்லாமல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் இந்தியாவில் 4ஜி உடன் மட்டுமே வரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Realme 10 Confirmed To Launch With MediaTek Helio G99 Processor on November 9

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X