சிறந்த கேமிங் அம்சங்களுடன் அறிமுகமாகும் Realme 10 (4G) போன்!
கேமிங் பயனர்களுக்கு என்றே சிறந்த தரமான ரியல்மி 10 (4ஜி) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரியல்மி நிறுவனம். இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 10 (4ஜி)
குறிப்பாக இந்த ரியல்மி 10 (4ஜி) ஸ்மார்ட்போனின் மாடல் எண் RMX3630 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த ரியல்மி போன் MediaTek Dimensity வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ரியல்மி 10 (4ஜி) போனின் மற்ற அம்சங்களை வெளியாகவில்லை.
மேலும் சமீபத்தில் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50ஐ
6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 88.7% ஸ்கிரீன் டு பாடி விகிதத்தைக் கொண்டிருக்கிறது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Unisoc T612 பிராஸசர்
ஆக்டோ கோர் Unisoc T612 பிராஸசர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் உள்ள பிராசஸர் மேம்பட்ட வேகத்தை கொடுக்கும்.

மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஆதரவு
3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அருமையான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி ஸ்லாட் ஆதரவு உள்ளது.

8எம்பி ரியர் கேமரா
நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி
வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இந்த போனின் எடை 182 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி 10 (4ஜி) ஸ்மார்ட்போன் சிறந்த அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications