Realme 10 லுக்க பார்த்து மயங்கிடாதீங்க.! இதில 1 முக்கியமான அம்சம் மிஸ்ஸிங்.! அது என்ன தெரியுமா?

|

Realme நிறுவனம் வாக்குறுதி அளித்தபடி புதிதாக Realme 10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இன்று உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரியல்மி 10 சீரிஸ் வரிசையில் நிறுவனம் realme 10 pro மாடல்களை அறிமுகம் செய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, ரியல்மி நிறுவனம் இந்த முறை ப்ரோ மாடலக்ளை இந்த அறிமுக நிகழ்வில் அறிமுகம் செய்யவில்லை.

Realme 10 உடன் ப்ரோ மாடல்கள் அறிமுகமாகவில்லையா?

Realme 10 உடன் ப்ரோ மாடல்கள் அறிமுகமாகவில்லையா?

மறுபுறம், நிறுவனம் Realme 10 Pro தொடர் வரிசையில் உள்ள ப்ரோ மாடல்களை சீனாவில் இந்த மாத இறுதியில், (அதாவது வருகின்றன நவம்பர் 17 ஆம் தேதி நடக்கும்) நிகழ்வில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி, இப்போது புதிதாக மிரட்டலான தோற்றத்துடன் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் Realme 10 விபரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பட்ஜெட் விலையில் பெஸ்ட் போன் தான் இந்த

பட்ஜெட் விலையில் பெஸ்ட் போன் தான் இந்த "ரியல்மி 10".. ஆனால்?

இந்த புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது Realme 9 இன் வாரிசாக வருகிறது. இது சமீபத்திய MediaTek Helio G99 SoC உடன் வருகிறது. பட்ஜெட் விலை பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் லுக் வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில வாடிக்கையாளர்களின் தேவையை இந்த Realme 10 நிறைவேற்றாது.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

யாருக்கெல்லாம் பெஸ்டாக அமையப்போகிறது? யாருக்கெல்லாம் ஏமாற்றத்தை வழங்கப்போகிறது?

யாருக்கெல்லாம் பெஸ்டாக அமையப்போகிறது? யாருக்கெல்லாம் ஏமாற்றத்தை வழங்கப்போகிறது?

சரி, அப்படி இந்த புது போனில் என்ன குறைபாடு உள்ளது? இது யாருக்கெல்லாம் பெஸ்டாக அமையப்போகிறது? யாருக்கெல்லாம் இது ஏமாற்றத்தை வழங்கப்போகிறது? என்பது போன்ற விபரங்களை முழுமையாகப் பார்க்கலாம்.

புதிய Realme 10 பற்றி பேசுகையில், பார்த்தவுடனே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கியுள்ளது. இதற்கான முக்கிய காரணம் இதன் டிசைன் ஆகும்.

50MP கேமராவுடன் மக்களை மயக்கும் டிசைன்.!

50MP கேமராவுடன் மக்களை மயக்கும் டிசைன்.!

பெஸ்டான டிஸைனுடன், அட்டகாசமான அம்சங்களை இந்த டிவைஸ் பேக் செய்கிறது. இது செல்ஃபி ஸ்னாப்பருக்காக கார்னர் பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் வருகிறது. பின்பக்கத்தில், இது டூயல் கேமரா உடன் மிரட்டலான தோற்றத்தை வழங்குகிறது.

இதன் கலர் கிரேடியன்ட் தனித்துவமான லுக்கை உருவாக்கியுள்ளது. பட்ஜெட் விலையில், 50MP கேமராவுடன் மக்களை மயக்குகிறது இந்த சாதனம்.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

Realme 10 போனின் ஷார்ட் ஸ்பெக்ஸ் டீடெயில்

Realme 10 போனின் ஷார்ட் ஸ்பெக்ஸ் டீடெயில்

  • 6.4-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே
  • MediaTek Helio G99 சிப்செட்
  • 4ஜிபி / 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 12 OS
  • 50MP + 2MP டூயல் ரியர் கேமரா
  • 16MP செல்ஃபி ஸ்னாப்பர்
  • 5000mAh பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங்
  • Realme 10 ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்ச விபரங்கள்

    Realme 10 ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்ச விபரங்கள்

    Realme 10 ஆனது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.4-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெப்ரெஷ் ரேட் உடன் மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச் ஹோல் நாட்ச்சை கொண்டுள்ளது.

    இது 1000nits வரை பீக் பிரைட்னெஸ் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த போன் MediaTek Helio G99 SoC மூலம் இயக்கப்படுகிறது.

    அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

    Realme 10 போனில் உள்ள ஒரு சிறிய குறைபாடு என்ன தெரியுமா?

    Realme 10 போனில் உள்ள ஒரு சிறிய குறைபாடு என்ன தெரியுமா?

    நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூற வரும், குறைபாடு இங்கே தான் ஒளிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் வரும் இந்த MediaTek Helio G99 சிப்செட் வெறும் 4ஜி நெட்வொர்க்கை மட்டுமே ஆதரிக்கிறது.

    உலகமே 5ஜி நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், ரியல்மி இப்படி ஒரு டிவிஸ்டை ஏன் வைத்தது என்று புரியவில்லை. சமீபத்தில் வெளிவரும் பெரும்பாலான மாடல்கள் 5ஜி இணக்கத்துடன் வருவதனால், குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஏமாற்றம் தான்.. ஆனாலும் பெஸ்ட் போன்.!

    ஏமாற்றம் தான்.. ஆனாலும் பெஸ்ட் போன்.!

    இது ஒரு 5ஜி டிவைஸ் என்று யூகித்து நினைத்து வாங்கிவிடாதீர்கள். இது முழுக்க முழுக்க 4ஜி நெட்வொர்க்கில் இயங்கும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலாகும்.

    இந்த ஒரு குறையைத் தவிர இதில் வேறெந்த குறைபாடும் இல்லை என்பதே உண்மை. பட்ஜெட் விலையில் 5ஜி போனை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த டிவைஸ் ஏமாற்றத்தை வழங்கலாம்.

    இருப்பினும், குறைந்த விலையில் இது பெஸ்ட் சாய்ஸ் 4ஜி சாதனமாகும்.

    2023-ல 2023-ல "இந்த" Vivo போனை தான் எல்லாரும் போட்டி போட்டு வாங்க போறாங்க.! ஏன் தெரியுமா?

    பட்ஜெட்டில் 16ஜிபி ரேம் அம்சமா? அடேங்கப்பா.!

    பட்ஜெட்டில் 16ஜிபி ரேம் அம்சமா? அடேங்கப்பா.!

    இந்த ரியல்மி 10 ஸ்மார்ட்போன் 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் 8ஜிபி எக்ஸ்பெண்டபிள் ரேம் வசதியும் உள்ளது. இதன் மூலம் மொத்த ரேமை 16ஜிபி வரை கொண்டு செல்லலாம்.

    இது ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான Realme UI 3.0 உடன் இயங்குகிறது. இது 4G, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் USB டைப்-சி போர்ட் உடன் வருகிறது.

    Realme 10 4G கேமரா அம்சம் மற்றும் விலை என்ன?

    Realme 10 4G கேமரா அம்சம் மற்றும் விலை என்ன?

    இந்த Realme 10 4G ஆனது 33W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.


    இது 50MP மெயின் கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தில் 16MP ஸ்னாப்பரை கொண்டுள்ளது.

    இதன் விலை பற்றிப் பார்க்கையில்,Realme 10 இன் 4ஜிபி + 64ஜிபி மாடல் $229 விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ.18,700 ஆகும்.

    அதிரடி விலை குறைப்பு.! பாதிக்கு பாதி விலையில் Samsung Galaxy M53 5G வாங்கலாம்.! ஆனா?அதிரடி விலை குறைப்பு.! பாதிக்கு பாதி விலையில் Samsung Galaxy M53 5G வாங்கலாம்.! ஆனா?

    Realme 10 மிரட்டலான கலரில் ஒரு பெஸ்ட் ஸ்மார்ட்போன்

    Realme 10 மிரட்டலான கலரில் ஒரு பெஸ்ட் ஸ்மார்ட்போன்

    அதேபோல், இதன் 4ஜிபி + 128ஜிபி மாடல் $249 (இந்திய மதிப்பில் தோராயமாக சுமார் ரூ.20,300) என்ற விலையில் வருகிறது. அடுத்து, இதன் 6ஜிபி + 128ஜிபி மாடல் $269 (தோராயமாக ரூ.21,900) விலையில் வருகிறது.

    இறுதியாக, இதன் ஹை-வேரியண்ட் மாடலான 8ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 256ஜிபி மாடல் $299 என்ற விலையில் வருகிறது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 24,400 ஆகும். இந்த போன் பிளாக் மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் வருகிறது.

Best Mobiles in India

English summary
Realme 10 4G Launched Globally With 50MP Camera and MediaTek Helio G99 SoC

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X