Home
Mobile

ஜூன் 1: பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஒப்போ ரியல்மீ 1.!

ஒரு 3410mAh பேட்டரி மூலம் எரியூட்டப்படும் ரியல்மீ 1 ஆனது, அதன் நீண்ட பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. அதற்கு ஸ்மார்ட்போனின் ஏஐ பேட்டரி மேலாண்மை துணைபுரியும்.

By Prakash S

ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி வரும் ஜூன் 1 இந்தியாவில் ஒப்போ ரியல்மீ 1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம், மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஜூன் 1: பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஒப்போ ரியல்மீ 1.!

வரும் ஜூன் 1-ம் தேதி அன்று அமேசான் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.8,989-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மீ 1 ஆனது, 12-அடுக்கு நானோடெக் மெட்டீரியல் மூலம் செய்யப்பட்ட ஒரு பளபளப்பான மேற்பரப்பை கொண்ட
டயமண்ட் பிளாக் பூச்சு கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. மீடியா டெக்
ஹெலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவையும் கொண்டுள்ளது.

ஜூன் 1: பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஒப்போ ரியல்மீ 1.!

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 6 ஜிபி ரேம் போன்ற மூன்று
சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ளது. மூன்றிலுமே, 128 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கத்திற்காக ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு
ஸ்லாட் உள்ளது. ரியல்மீ 1 ஆனது, ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போன்ற ஸ்மார்ட்போன்களை
பின்னுக்குத்தள்ளும் வண்ணம் (செயல்திறன் அடிப்படையில்), ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

ஒரு 3410mAh பேட்டரி மூலம் எரியூட்டப்படும் ரியல்மீ 1 ஆனது, அதன் நீண்ட பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. அதற்கு ஸ்மார்ட்போனின்
ஏஐ பேட்டரி மேலாண்மை துணைபுரியும். ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான கலர் ஓஎஸ் 5.0 கொண்டு இயங்கும் ரியல்மீ 1 ஆனது
நிறுவனத்திற்கே உரிய சிறப்பானதொரு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

ஒளியியல் துறையை பொறுத்தவரை, ரியல்மீ ஒரு 13 எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின்
பெரும்பாலான கேமராக்களில் இருப்பது போன்றே, இதிலும் buzzword AI பயன்படுத்தப்படுகிறது. உடன் முன் பக்கம் மற்றும் பின்புற
கேமராக்களில் ஏஐ ஸ்டிக்கர் அம்சமும் இடம்பெறும். உடன் ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் கேமராக்கள் ஆனது 296 முகப் புள்ளிகளை அங்கீகரிக்கும் திறன்
கொண்டதாகவும் கூறமுடிகிறது.

ஜூன் 1: பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஒப்போ ரியல்மீ 1.!

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இருப்பது போன்றே, எச்டிஆர், விவி மோட் மற்றும் பொக்கே விளைவுகளை வழங்கும் கேமராக்களை
கொண்டிருந்தாலும் கூட, ரியல்மீ 1-ல் கைரேகை ஸ்கேனர் இடம்பெறவில்லை என்பது ஒரு குறை தான். ஆனால் அதை ஈடுகட்டும் வண்ணம் ஃபேஸ்
அன்லாக் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இது பயோமெட்ரிக் சென்சார் இல்லாமையை எப்படி சரிசெய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க
வேண்டும்.

Best Mobiles in India

English summary
Realme 1 Next Sale Is on June 1 Amazon Confirms ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X