ரியல்மி 1 (4ஜிபி|64ஜிபி) ஸ்மார்ட் போன் வெறும் ரூ.1,340 க்கு வாங்கலாம்.! எப்படினு தெரியனுமா?
அமேசான் நிறுவனம் ஏற்கனவே பல சிறப்பு தள்ளுபடி பற்றிய அறிவிப்புகளை அறிவித்துவிட்டது. அதில் ரியல்மி 1 ஸ்மார்ட் போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அமேசான் இன் புது கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த விழாக்கால கொண்டாட்ட விற்பனையில் அமேசான் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பல பொருட்களை பல சலுகை மற்றும் தள்ளுபடியுடன் வாங்கிக்கொள்ளலாம்.
அமேசான் நிறுவனம் ஏற்கனவே பல சிறப்பு தள்ளுபடி பற்றிய அறிவிப்புகளை அறிவித்துவிட்டது. அதில் ரியல்மி 1 ஸ்மார்ட் போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ரியல்மி 1
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் விற்பனையில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ரியல்மி 1 ஸ்மார்ட் போன்களுக்கு 15% சலுகை வழங்கப்படுகிறது. ரியல்மி 1, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் ஸ்மார்ட் போன் சலுகையுடன் வெறும் ரூ.9,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த வேரியண்ட் கொண்ட ரியல்மி 1 ஸ்மார்ட் போன் இன் அசல் விலை ரூ.12,990 என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 1 சலுகை விலை
அதேபோல் ரியல்மி 1, 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் ஸ்மார்ட் போன் சலுகையுடன் வெறும் ரூ.11,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த வேரியண்ட் கொண்ட ரியல்மி 1 ஸ்மார்ட் போன் இன் அசல் விலை ரூ.14,990 என்பது குறிப்பிடத்தக்கது.

கேஷ் பேக் சலுகை
அமேசான் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் சிட்டி வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு உடனடி 10% கேஷ் பேக் சலுகையும் வழங்கியுள்ளது. இத்துடன் ரியல்மி 1 ஸ்மார்ட் போன் வாங்கும் பயனர்களுக்கு சிறப்பு விழாக்கால கொண்டாட்ட விற்பனை சலுகையாக கூடுதல் எக்ஸ்சேஞ் சலுகையை அமேசான் நிறுவனம் வழங்கியுள்ளது.

ரியல்மி 1 வெறும் ரூ.1,340
ரியல்மி 1 வாங்கும் பயனர்கள், ஏதேனும் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் கொண்ட ஸ்மார்ட் போன்னை எக்ஸ்சேஞ் செய்யும் பொழுது புதிய ரியல்மி 1 ஸ்மார்ட் போன் வெறும் ரூ.1,340 க்கு வழங்கப்படுமென்று அமேசான் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதே போல் ரியல்மி 1, 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் ஸ்மார்ட் போன் எக்ஸ்சேஞ் செய்யும் பொழுது ரூ.12,190 சலுகை விலை குறைக்கப்பட்டு வெறும் ரூ.1,800-க்கு வழங்கப்படுமென்று அமேசான் உறுதியளித்துள்ளது.


Click it and Unblock the Notifications