கடந்த வாரம் வெளியான 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,000/- ஆபர்; அமேசான் அதிரடி.!

4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத் 4.2 லோ எனர்ஜி, ஏ-ஜிபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

|

கேமராக்களில் பல புதுமைகளை புகுத்தும் "செல்பீ நிபுணர்" என்று அழைக்கப்படும் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் தொடரான ரியல்மீ வரிசையின் கீழ் வெளியான ஸ்மார்ட்போன் தான் - ரியல்மீ 1. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாறுபாடு, இன்று அமேசான் தளத்தில் அதன் வழக்கமான விற்பனை பட்டியலில் இடம்பெறவுள்ளது.

அமேசான் வழியாக மட்டுமே வாங்க கிடைக்கும் என்பதால் ரியல்மீ 1 மீது நம்பமுடியாத விலைக்குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு வரும் இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.5000/- என்கிற அளவிலான சலுகையை பெற்றுள்ளது.

வங்கி மற்றும் இதர சலுகைகளை பொறுத்தவரை..!

வங்கி மற்றும் இதர சலுகைகளை பொறுத்தவரை..!

இதுவொரு பிளாஷ் சேல் அல்ல என்பதும், ரூ.5000/- சலுகையுடன் சேர்த்து அமேசானின் எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பின் கீழ் ரூ.7,208/- வரை பரிமாற்ற வாய்ப்பை பெறலாம் என்பதும் கூடுதல் சிறப்பு. பல வகையான வங்கி அட்டைகளுக்கான 6 மாத கால நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் பஜாஜ் பைனான்ஸ் கார்டு பயன்பாடு உட்பட பல சலுகைகள் கிடைக்கும்.

கின்டெல் இபுக்ஸ் மற்றும் ஜியோ சலுகைகள்.!

கின்டெல் இபுக்ஸ் மற்றும் ஜியோ சலுகைகள்.!

இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு கின்டெல் இபுக்ஸ் வாங்குவதற்கான 80 சதவிகிதம் (ரூ.300) தள்ளுபடியும் கிடைக்கும். உடன் ஒரு இலவச ஸ்மார்ட்போன் கேஸ் மற்றும் ஸ்க்ரீன் ப்ரோடெக்டர் மற்றும் ரூ.4,850/- மதிப்பிலான ஜியோ சலுகைகள் ஆகியவைகளையும் கிடைக்கும்.

ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம்.!

ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம்.!

இந்தியாவில், ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடான 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மாடல் ரூ.8,990/-க்கும் மற்றும் இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாடல் ரூ.13,990/-க்கும் வாங்க கிடைக்கும். மறுகையில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாடல் ஒன்றும் உள்ளது. ஆனால் அது இன்னும் வாங்குவதற்கு பட்டியலிடப்படவில்லை. அது விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் மீ1-ன் பட்ஜெட்டை மீறிய வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே.!

ரியல் மீ1-ன் பட்ஜெட்டை மீறிய வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே.!

அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மீ 1 ஆனது, 12-அடுக்கு நானோடெக் மெட்டீரியல் மூலம் செய்யப்பட்ட ஒரு பளபளப்பான மேற்பரப்பை கொண்ட டயமண்ட் பிளாக் பூச்சு கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. மீடியா டெக் ஹெலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவையும் கொண்டுள்ளது.

திருப்தியான சேமிப்பு திறன்.!

திருப்தியான சேமிப்பு திறன்.!

முன்னர் குறிப்பிட்டபடி, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 6 ஜிபி ரேம் போன்ற மூன்று சேமிப்பு மாடல்களில் வெளியாகியுள்ள இந்த மூன்று மாடல்களிலுமே 128 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கத்திற்காக ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. ரியல்மீ 1 ஆனது, ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 போன்ற ஸ்மார்ட்போன்களை பின்னுக்குத்தள்ளும் வண்ணம் (செயல்திறன் அடிப்படையில்), ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

தேவைக்கு மீறிய பேட்டரி.!

தேவைக்கு மீறிய பேட்டரி.!

ஒரு 3410mAh பேட்டரி மூலம் எரியூட்டப்படும் ரியல்மீ 1 ஆனது, அதன் நீண்ட பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. அதற்கு ஸ்மார்ட்போனின் ஏஐ பேட்டரி மேலாண்மை துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது . ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான கலர் ஓஎஸ் 5.0 கொண்டு இயங்கும் ரியல்மீ 1 ஆனது நிறுவனத்திற்கே உரிய சிறப்பானதொரு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

296 முகப் புள்ளிகளை அங்கீகரிக்கும் கேமரா திறன்.!

296 முகப் புள்ளிகளை அங்கீகரிக்கும் கேமரா திறன்.!

ஒளியியல் துறையை பொறுத்தவரை, ரியல்மீ ஒரு 13 எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஒப்போ நிறுவனத்தின் பெரும்பாலான கேமராக்களில் இருப்பது போன்றே, இதிலும் buzzword AI பயன்படுத்தப்படுகிறது. உடன் முன் பக்கம் மற்றும் பின்புற கேமராக்களில் ஏஐ ஸ்டிக்கர் அம்சமும் இடம்பெறும். உடன் ரியல்மீ 1 ஸ்மார்ட்போனின் கேமராக்கள் ஆனது 296 முகப் புள்ளிகளை அங்கீகரிக்கும் திறன் கொண்டதாகவும் கூறமுடிகிறது.

நம்பினால் நம்புங்கள்... பேஸ் அன்லாக் அம்சம்.!

நம்பினால் நம்புங்கள்... பேஸ் அன்லாக் அம்சம்.!

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இருப்பது போன்றே, எச்டிஆர், விவி மோட் மற்றும் பொக்கே விளைவுகளை வழங்கும் கேமராக்களை கொண்டிருந்தாலும் கூட, ரியல்மீ 1-ல் கைரேகை ஸ்கேனர் இடம்பெறவில்லை என்பது ஒரு குறை தான். ஆனால் அதை ஈடுகட்டும் வண்ணம் ஃபேஸ் அன்லாக் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. பின், பாஸ்வேர்ட் மற்றும் பேட்டர்ன் உட்பட பேஸ் அன்லாக் இருக்கிறது அனால் பயோமெட்ரிக் சென்சார் இல்லை. அதை இந்த ஸ்மார்ட்போன் எப்படி சரிசெய்யும் என்பதை பொறுத்திருந்து பயன்படுத்தி தான் பார்க்க வேண்டும்.

10,000 டிராப் டெஸ்ட் (கீழே போட்டு பார்க்கும் சோதனை).!

10,000 டிராப் டெஸ்ட் (கீழே போட்டு பார்க்கும் சோதனை).!

4ஜி VoLTE, வைஃபை, ப்ளூடூத் 4.2 லோ எனர்ஜி, ஏ-ஜிபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. அளவீட்டில் 156 × 75.3 × 7.8 மிமீ மற்றும் 158 கிராம் எடையுள்ள ஒரு கண்ணாடியிழை உடலைக் கொண்டுள்ளது. 10,000 டிராப் டெஸ்ட் (கீழே போட்டு பார்க்கும் சோதனை) 100,000 பட்டன்ள் டெஸ்ட், 10,000 யூஎஸ்பி டெஸ்ட் போன்ற பல வகையான தாக்குப்பிடிக்கும் மற்றும் முரட்டுத்தனம் சார்ந்த சோதனைகளை சந்தித்துள்ளது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
சர்வீஸ் சென்டர்கள் எப்படி.?

சர்வீஸ் சென்டர்கள் எப்படி.?

உடன் இந்த துணை பிராண்டிற்கான 500-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களை (இந்தியா முழுவதும்) ஒப்போ அறிவித்துள்ளது. சில முக்கிய நகரங்களுக்கு 1 மணி நேர உத்தரவாத சேவையும் அணுக கிடைக்கும். மேலும் பல ஒப்போ மற்றும் இதர நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அறிமுகம், அம்சங்கள், சலுகைகள், விலைகுறைப்பு மற்றும் லீக்ஸ் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
RealMe 1 6GB Variant Now Available for Sale on Amazon: Offers Up to Rs.5000. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X