ஐபோனே கும்புடு போடும் பக்கா பட்ஜெட் போன் ரெடி! பழைய கெத்துடன் திரும்பி வரும் Redmi.!

|

Xiaomi முன்னதாகவே சீனாவில் Redmi Note 12 தொடரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அதன் சொந்த நாட்டு சந்தையான சீனாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இதே ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாக இருக்கிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடுமையாக நிலவி வரும் போட்டிக்கு நடுவில் சியோமி இதை அறிமுகம் செய்ய இருக்கிறது.

ரெட்மி நோட் 12

ரெட்மி நோட் 12

சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அறிமுகமாகும் நோட் 12க்கும் அதிக வித்தியாசம் இருக்கும் என கூறப்படுகிறது. சீன ரெட்மி நோட் 12 மாடல் ஆனது பிளாட் எட்ஜ் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இதே வடிவமைப்பு இந்திய மாடலிலும் இருக்குமா என்பது சந்தேகம் தான். சமீபகாலமாக தொய்வு நிலையை சந்தித்து வரும் ரெட்மி இந்த புதிய போன் அறிமுகத்தின் மூலம் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்கலை தீர்க்க வரும் ரெட்மி

சிக்கலை தீர்க்க வரும் ரெட்மி

சியோமிக்கு என இந்தியாவில் தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்த நிறுவனம் என்றே இதை கூறலாம். ஆனால் சமீபத்திய நாட்களாக இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் எதுவும் அந்தளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்த அனைத்து சிக்கலையும் ரெட்மி நோட் 12 பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோட் சீரிஸ் இல் 8 ஆண்டுகளை கடந்த ரெட்மி

நோட் சீரிஸ் இல் 8 ஆண்டுகளை கடந்த ரெட்மி

ரெட்மி நோட் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யத் தொடங்கி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் நிறுவனம் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ரெட்மி நோட் 12 இன் இந்திய வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த வதந்திகளும் தகவலும் சமீப காலமாகவே இருந்து வருகிறது.

2023 ஆம் ஆண்டில் அறிமுகம்

2023 ஆம் ஆண்டில் அறிமுகம்

Redmi Note 12 ஸ்மார்ட்போனானது 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. Xiaomi ஏற்கனவே சீனாவில் Redmi Note 12 தொடரை வெளியிட்டது.

குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்

குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்

சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அறிமுகமாகும் நோட் 12 ஸ்மார்ட்போனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஏறத்தாழ வெவ்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் எனவும் விலை விவரங்கள் நெருக்கமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சியோமி நோட் 12 சீரிஸ் விவரங்கள்

சியோமி நோட் 12 சீரிஸ் விவரங்கள்

சீனாவில் சியோமி நோட் 12 ஸ்மார்ட்போன்கள் மூன்று மாடல்களில் இல் அறிமுகமாகி இருக்கிறது. அது Redmi Note 12, Note 12 Pro மற்றும் Note 12 Pro+ ஆகும். இந்தியாவில் இப்படி இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 12 சீரிஸ் இல் இந்தியாவில் அதிக மாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 11 தொடரை பொறுத்தவரை இதில் ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி, ரெட்மி நோட் 11 எஸ்இ, ரெட்மி நோட் 11 ப்ரோ, ரெட்மி நோட் 11எஸ், ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11டி 5ஜி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கிறது.

Redmi Note 12 5G சிறப்பம்சங்கள்

Redmi Note 12 5G சிறப்பம்சங்கள்

Redmi Note 12 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஐபோன் 12 போன்றே தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால் இதன் விலை அவ்வளவு கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பிற அம்சங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போனில் 2400x1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு கொண்ட 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ரெட்மி போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவைக் கொண்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

Redmi Note 12 சீரிஸ் இன் அடிப்படை மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இதில் 48 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

Redmi Note 12 5G விலை

Redmi Note 12 5G விலை

Redmi Note 12 5G ஸ்மார்ட்போனின் சீன விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள நான்கு மாடல்களிலும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் இடம்பெற்றுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,199 (தோராயமாக ரூ.13,600) எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 1,299 (தோராயமாக ரூ.14,600) எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் CNY 1,499 (தோராயமாக ரூ.17,000) எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,699 (தோராயமாக ரூ.19,300) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Really looks like an iPhone: Redmi Going to Launch Soon its Redmi Note 12 in india at Midrange Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X