கேமரா போன்களின் கிங்.. வர்றார்! வர்றார்! ஒன்பிளஸ், சாம்சங் லாம் ஓரம்போங்க!

|

சில கேமரா போன்களை கொண்டு எதை போட்டோ எடுத்தாலும்.. எங்கே வீடியோ ரெக்கார்ட் செய்தாலும்.. அட்டகாசமான அவுட்புட் கிடைக்கும்!

அப்படியான பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்கள் (Best Camera Smartphone) - ஆப்பிள் ஐபோன் தொடங்கி, சாம்சங், ஒன்பிளஸ், ஒப்போ, ரியல்மி வரையிலாக - எல்லா நிறுவனங்களிடமும் உண்டு!

அவைகளில் எது பெஸ்ட்?

அவைகளில் எது பெஸ்ட்?

எல்லா நிறுவனங்களிடமும் பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன தான். ஆனால் "அவைகளில் எது பெஸ்ட்?" என்கிற கேள்வி வந்துவிட்டால்.. போட்டி மிகவும் பலமானதாகவும்.. உன்னிப்பானதாகவும் இருக்கும்!

இந்த இடத்தில் தான், மொபைல் போன் கேமராக்களின் செயல்திறன்களை அக்குவேறு ஆணிவேராக ஆய்வு செய்து ஸ்மார்ட்போன்களுக்கு மதிப்பெண்களை வழங்கும் DXOMARK போன்ற வலைத்தளங்களின் உதவி நமக்கு தேவைப்படும்!

வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!

அந்த பட்டியலில் அடிக்கடி இடம்பெறும் ஒரு சீரீஸ்!

அந்த பட்டியலில் அடிக்கடி இடம்பெறும் ஒரு சீரீஸ்!

அப்படியான டிஎக்ஸ்ஓமார்க் லிஸ்டிங்கில் உள்ள ஸ்மார்ட்போன் கேமரா செக்ஷனின் கீழ் அடிக்கடி இடம்பெறும் ஒரு ஸ்மார்ட்போன் சீரீஸ் உள்ளதென்றால் அது - விவோவின் எக்ஸ் சீரீஸ் (Vivo X Series) மாடல்களே ஆகும்!

விவோ நிறுவனத்தின் மொபைல் போன் கேமரா செயல்திறன்கள் ஆனது, அதன் எக்ஸ்50 சீரீஸில் இருந்து மேம்பட்டு கொண்டே போகிறது என்று கூறினால், மறுப்பு தெரிவிக்கும் ஆட்கள் மிக மிக குறைவாகவே இருப்பர்!

அடுத்ததாக?

அடுத்ததாக?

பட்டையை கிளப்பும் கேமரா பெர்ஃபார்மென்ஸை வழங்கும் விவோவின் எக்ஸ்80 சீரீஸை தொடர்ந்து - விவோ எக்ஸ்90 சீரீஸ் (Vivo X90 Series) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது எப்போது அறிமுகமாகும்? இதன் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் வரும்? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

யாருகிட்ட? மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை யாருகிட்ட? மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை "வாய் பிளக்க" வைக்கும் இந்தியா!

வழக்கம் போல.. விவோ  எக்ஸ்90 சீரீஸின் கீழும்!

வழக்கம் போல.. விவோ எக்ஸ்90 சீரீஸின் கீழும்!

இம்முறையும்.. விவோ எக்ஸ் சீரிஸின் வழக்கத்தை தொடரும்படி, எக்ஸ்90 சீரீஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதாவது Vivo X90, Vivo X90 Pro மற்றும் Vivo X90 Pro+ மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சீரீஸ் Snapdragon 8 Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.

Vivo X90 Pro+ மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

Vivo X90 Pro+ மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

கிஸ்மோசீனா வழியாக கிடைத்த தகவலின்படி, விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் ஆனது கர்வ்டு எட்ஜ்களுடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முன்னரே குறிப்பிட்டபடி, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் அல்லது MediaTek Dimensity-யின் பிளாக்ஷிப் சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

இந்த ஸ்மார்ட்போன் UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் LPDDR5x ரேம்-ஐ கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை?

கேமராக்களை பொறுத்தவரை?

கேமராக்களுக்கு வரும் போது, இந்த எக்ஸ்-சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64எம்பி டெலிஃபோட்டோ லென்ஸை பேக் செய்யலாம்.

மேலும் இதன் கேமரா செட்டப்பில் - சிறப்பான கேமரா செயல்திறன்களை வழங்கும் - 1 இன்ச் சென்சார் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

Vivo X90 மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

Vivo X90 மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

விவோ எக்ஸ்90 மாடலை பொறுத்தவரை, இதுவும் கர்வ்டு எட்ஜ்களுடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேவை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மற்றும் 1-இன்ச் கேமரா சென்சார் போன்ற அம்சங்கள் இடம்பெறலாம்; அதாவது அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் Vivo X90 Pro+ போலவே இருக்கலாம்!

Vivo X90 Pro மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

Vivo X90 Pro மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ப்ரோ மாடலை பொறுத்தவரை, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 4780mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். வெண்ணிலா மாடலான X90 ஆனது 4700mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

விவோ எக்ஸ்90 சீரீஸ் ஆனது இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Best Mobiles in India

English summary
Best Camera Smartphone is Coming Vivo X90 Series to launch in December Packs Powerful Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X