நத்திங் போனுக்கு ஆப்பு ரெடி.. போட்டிக்கு நண்பனை களமிறக்கிய VIVO! இதை பாருங்க ஒரு நிமிஷம்!

|

Vivoவின் துணை பிராண்டான ஐக்யூ நாங்களும் போட்டியில் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது புதுப்புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஐக்யூ நிறுவனம் மேம்பட்ட ஒரு ஸ்மார்ட்போனை களமிறக்கி இருக்கிறது. அது ஐக்யூ நியோ 7 ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலையை பார்க்கலாம்.

அதிநவீன வெப்பநிலை கண்டறிதல் தொழில்நுட்பம்

அதிநவீன வெப்பநிலை கண்டறிதல் தொழில்நுட்பம்

ஐக்யூ நியோ 7 ஸ்மார்ட்போனானது அதிநவீன வெப்பநிலை கண்டறிதல் தொழில்நுட்பம், 9 வெப்பநிலை சென்சார்கள் உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அதோடு இதில் 50 எம்பி பிரைமரி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என பல மேம்பட்ட ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. இதுக்கும் நத்திங் போனுக்கும் என்ன சம்பந்தம் என்று முதலில் பார்க்கலாம்.

நத்திங் போனுக்கு போட்டியாக புது ஸ்மார்ட்போன்

நத்திங் போனுக்கு போட்டியாக புது ஸ்மார்ட்போன்

நத்திங் போன் 1 இன் இதே 8ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.30,000 என்ற விலைப்பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே விலைப்பிரிவில் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனும் வெளியாகி இருக்கிறது. நத்திங் போன் ஆனது இந்த 30,000 ரூபாய் விலைப்பிரிவில் பல்வேறு தனித்துவ அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த புதிய ஐக்யூ ஸ்மார்ட்போனும் பல்வேறு தனித்துவ அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம்.

iQOO நியோ 7 விலை

iQOO நியோ 7 விலை

iQOO நியோ 7 விலை குறித்து பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட்போனானது 4 வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் RMB 2699 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.30,890 ஆகும். அதேபோல் 8ஜி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் RMB 2,999 (தோராயமாக ரூ.34,400) எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் RMB 3,299 (தோராயமாக ரூ.37,800) எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் RMB 3,599 (தோராயமாக ரூ.41,200) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 31 முதல் விற்பனை தொடக்கம்

அக்டோபர் 31 முதல் விற்பனை தொடக்கம்

இந்த ஸ்மார்ட்போனானது ஆரஞ்ச் மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் தற்போதே முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது. இதன் விற்பனை அக்டோபர் 31 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

iQoo Neo 7 சிறப்பம்சங்கள்

iQoo Neo 7 சிறப்பம்சங்கள்

iQoo Neo 7 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 1080x2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.78 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 ஜிபி வரையிலான ரேம் ஆதரவு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ CPU சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் ஆதரவு

ஐக்யூ நியோ 7 ஸ்மார்ட்போனில் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என்ற இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆர்ஜின் ஓஎஸ் ஓஷன் யுஐ மூலம் இயக்கப்படுகிறது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

iQoo Neo 7 ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 50 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

iQoo Neo 7 ஸ்மார்ட்போனில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இன்ப்ரா ரெட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Ready to compete with Nothing Phone.. Vivo's sub-brand IQOO launched Best Mid-Range Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X