Home
Mobile

ஜஸ்ட் 2 லட்சம் ரூபாய்.. Samsung Galaxy Z Fold 6, Z Flip 6 இந்திய விலைகள் அறிவிப்பு.. முன்பதிவு ஆரம்பம்!

சாம்சங் நிறுவனம் அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து "மடக்கக்கூடிய" ஸ்மார்ட்போன் பிரிவை பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. நேற்று (ஜூலை 10 ஆம் தேதி) மாலை நடந்த கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வில் - கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் அந்த நேரத்தில் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் "சரியான" இந்திய விலை நிர்ணயம் குறித்த தகவல் வெளிப்டுத்தப்படவில்லை. தற்போது அந்த விவரங்களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6) மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6) ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்களை மட்டுமின்றி, இவ்விரு ஸ்மார்ட்போன்களின் மீதும் என்னென்ன விற்பனை சலுகைகள் கிடைக்கும் என்கிற விவரங்களையும் சாம்சங் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

Samsung Galaxy Z Fold 6, Z Flip 6 இந்திய விலைகள் அறிவிப்பு!

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6-ன் இந்திய விலை மற்றும் விற்பனை சலுகைகள்: இந்த ஸ்மார்ட்போன் 3ஸ்டோரேஜ் வகைகளில் வந்துள்ளது மற்றும் சைலர் ஷேடோ, நேவி மற்றும் பிங்க் ஷேடுகளில் கிடைக்கும் 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்களின் விலை முறையே ரூ.1,64,999 மற்றும் ரூ.1,76,999 ஆகும்

சில்வர் ஷேடோவில் மட்டுமே கிடைக்கும் 12ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.2,00,999 ஆகும். சாம்சங் இணையதளம் வழியாக, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்கள் பிரத்யேகமாக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 மீதான சலுகைகளை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் ரூ.14,999 மதிப்புள்ள இரண்டு ஸ்க்ரீன் / பார்ட்ஸ் ரீப்ளேஸ்மென்ட் பேக்கை ரூ.999 க்கு பெறலாம். கூடுதலாக, ரூ.8,000 அப்கிரேட் அல்லது ரூ.8,000 பேங்க் கேஷ்பேக்கை பெறுவதற்கான விருப்பமும் உள்ளது.

மேலும் சாம்சங் கவர்களின் மீது 50% தள்ளுபடியையும், கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா (Galaxy Watch Ultra), கேலக்ஸி வாட்ச் 7 (Galaxy Watch 7) மற்றும் கேலக்ஸி பட்ஸ் 3 (Galaxy Buds 3) சீரீஸ்களின் மீது 35% வரை தள்ளுபடியையும் பெறலாம். சாம்சங் ஃபிளாக்ஷிப் வாடிக்கையாளர்களுக்கு, கூடுதலாக ரூ.15,000 அப்கிரேட் சலுகையும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6-ன் இந்திய விலை மற்றும் விற்பனை சலுகைகள்: இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற 2 வகைகளில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலைகள் முறையே ரூ.1,09,999 மற்றும் ரூ.1,21,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ப்ளூ, மின்ட் மற்றும் சில்வர் ஷேடோ என 2 கலர்களில் வருகிறது. சாம்சங் இணையதளம் வழியாக பிளாக், ஒயிட் மற்றும் பீச் கலர் ஆப்ஷன்களும் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 மீதான சலுகைகளை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள் ரூ.9,999 மதிப்புள்ள இரண்டு ஸ்கிரீன் / பார்ட்ஸ் ரிப்ளேஸ்மென்ட் பேக்கை வெறும் ரூ.999 க்கு பெறலாம். மேலும் சாம்சங் கவர்களின் மீது 50% தள்ளுபடியையும், கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா (Galaxy Watch Ultra), கேலக்ஸி வாட்ச் 7 (Galaxy Watch 7) மற்றும் கேலக்ஸி பட்ஸ் 3 (Galaxy Buds 3) சீரீஸ்களின் மீது 35% வரை தள்ளுபடியையும் பெறலாம்.

சாம்சங் ஃபிளாக்ஷிப் வாடிக்கையாளர்களுக்கு, கூடுதலாக ரூ.15,000 அப்கிரேட் சலுகையும் கிடைக்கிறது. இதுதவிர்த்து இவ்விரு ஸ்மார்ட்போன்களின் மீதும் 9 மாத நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் அணுக கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் மூலம் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஜூலை 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reach Up to Rs 2 Lakhs Samsung Galaxy Z Fold 6 Z Flip 6 Price For India Sale Offer Announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X