Home
Mobile

டூயல் கேம்; 8ஜிபி ரேம் உடன் பிரபல நிறுவனங்களை மிரட்டும் ரேஸர் போன்.!

இது எந்தவொரு ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவிலும் அரிதாக காணப்படும் ஒன்றாகும்.

By Muthuraj

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நெக்ஸ்ட்பிட் நிறுவனத்தை வாங்கியதையடுத்து, ரேஸர் நிறுவனம் அதன் முதல் கேமிங்-சென்டிரிக் ஸ்மார்ட்போனை இன்று (நவம்பர் 1) அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெளியிடும் முன்பே அதாவது கடந்த அக்டோபர் 31 முதலே இக்கருவி இங்கிலாந்தை சேர்ந்த சில்லறை விற்பனையாளர் இணையத்தளமான 3ஜி-யில் பட்டியலிடப்பட்டிருந்தது.

இதுவரை வெளியான தகவல்களை கொண்டு இக்கருவியின் சில முக்கிய குறிப்புகளை அறிய முடிகிறது. அதிலிருந்து இந்த ஸ்மார்ட்போன் நெக்ஸ்ட்பிட் ராபின் போன்றதொரு வடிவமைப்பை பெறலாம் மற்றும் ஒரு 5.72 அங்குல இக்ஸோ டிஸ்பிளே கொண்டிருக்கலாம்.

அரிதாக காணப்படும் அம்சம்.!

அரிதாக காணப்படும் அம்சம்.!

மேலும் வெளியான பட்டியலின்படி, 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் என்ற விகிதத்தில் இக்கருவி வெளியாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்தவொரு ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவிலும் அரிதாக காணப்படும் ஒன்றாகும்.

8 ஜிபி அளவிலான ரேம்.!

8 ஜிபி அளவிலான ரேம்.!

இக்கருவியின் சிப்செட் பட்டியலிடப்படவில்லை என்றாலும் கூட, இது க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 கொண்டு இயங்கலாமென முந்தைய வதந்திகள் தெரிவிக்கின்றன. உடன் இரேஸர் போன் ஆனது ஒரு பாரிய 8 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகியவற்றுடன் வெளியாகலாம்.

கேமரா

கேமரா

கேமராதுறையை பொறுத்தமட்டில், எப் / 1.75 அகல கோணம் லென்ஸ் உடனான ஒரு 12 மெகாபிக்சல் கேமரா உடன் இணைந்த எப் / 2.6 ஸூம் லென்ஸ் கொட்டின 13 மெகாபிக்சல் என்றதொரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும். முன் பக்க கேமரா பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.

4000எம்ஏஎச் லித்தியம்-அயன் பேட்டரி

4000எம்ஏஎச் லித்தியம்-அயன் பேட்டரி

மேலும், தளத்தில் பட்டியலிடும் ஸ்மார்ட்போன் இரட்டை முன்பக்கம் எதிர்கொள்ளும் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள் கொண்டு வருமென குறிப்பிடுகிறது. உடன் 4000எம்ஏஎச் லித்தியம்-அயன் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படலாம் மற்றும் க்வால்காம் பாஸ்ட் சார்ஜ் 4+ அம்சத்தினையும் ஆதரிக்கும்.

'ஆண்ட்ராய்டு ரேஸர் எடிஷன்'

'ஆண்ட்ராய்டு ரேஸர் எடிஷன்'

பின்புற மையத்தில் ரேஸர் நிறுவனத்தின் லோகோவுடன் வெளியாகும் இந்த ரேஸர் ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் பாதிப்பானது 'ஆண்ட்ராய்டு ரேஸர் எடிஷன்' என்ற பெயரிலும் வெளியாகலாம்.

Best Mobiles in India

English summary
Razer phone with dual cameras, 8GB RAM listed online ahead of November 1 launch. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X