Home
Mobile

புதிய டியூவல் சிம் போன் விரைவில் அறிமுகம்: ரேஜ் மொபைல்ஸ்

By Super
புதிய டியூவல் சிம் போன் விரைவில் அறிமுகம்: ரேஜ் மொபைல்ஸ்
டெல்லி: இந்திய மொபைல்போன் மார்க்கெட்டில் 50 மொபைல்போன் தயாரிப்பாளர்கள் க்யூ கட்டி நிற்கின்றனர். இதில் பெரும்பாலான நிறுவனங்களை பார்த்தால், இந்த துறைக்கு புதியவர்களாகத்தான் இருக்கின்றனர். இவர்களின் ஒரே மார்க்கெட்டிங் யுக்தி, குறைந்த விலை, நிறைந்த வசதிகள் என்ற முழக்கம்தான்.

ஆனால், மார்க்கெட்டிற்கு புதிதாக வந்தாலும் சில நிறுவனங்கள் மட்டுமே குறைந்த விலையில் தரமான மொபைல்போன்களை வழங்கி தங்களது வாடிக்கையாளர் அடித்தளத்தை வலுவாக்கி கொள்கின்றன. இதற்கு உதாரணமாக ரேஜ் மொபைல்ஸ் நிறுவனத்தை கூறலாம்.

மார்க்கெட்டில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் 20 லட்சம் மொபைல்போன்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மேலும், தனது வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து அவ்வப்போது புதிய மொபைல்போன்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ரேஜ் ஆர்டி 20 வி என்ற பெயரில் புதிய மொபைல்போனை ரேஜ் மொபைல்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பார் வடிவமைப்பை கொண்ட இந்த போன் டியூவல் சிம் பொருத்தும் வசதிகொண்டது. இதன் கீபேடு எழுத்துக்களை டைப் செய்வதற்கும், நேவிகேஷன் வசதிகளையும் கொடுக்கும்.

ஜாவா சாப்ட்வேர் சப்போர்ட்டில் இதில் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களை பெற முடியும். இதன் விஜிஏ கேமரா வீடியோ ரெக்கார்டிங் வசதியை கொடுக்க வல்லது. 4ஜிபி வரை கூடுதலாக சேமிப்பு திறனை கூட்டிக்கொள்ளும் வசதியையும் பெறலாம். புளூடூத் மூலம் தகவல் பரிமாற்றத்தை செய்யலாம்.

எம்பி-3 பிளேயர், வீடியோ பிளேயர், எப்எம் ரேடியோ மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகிய வசதிகள் இருக்கின்றன. அடிப்படை ரகத்தை சேர்ந்த இந்த போன் ரூ.2,500 விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X