அடிச்சி நொறுக்கும் OnePlus 13.. முதல்ல 6000mAh.. அப்புறம் BOE X2 டிஸ்பிளே.. இப்போ Chipset-ம் கன்ஃபார்ம்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சுவாரசியமாக இது இந்த அக்டோபர் மாதமே அறிமுகம் செய்யப்பட உள்ளது; அதாவது வழக்கத்தை விட 2 மாதங்களுக்கு முன்பாகவே அறிமுகமாகிறது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட ஒன்பிளஸ் 13-ன் முக்கிய அம்சங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. அப்படியாக தற்போது ஒன்பிளஸ் 13-ன் சிப்செட் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் 13-ல் என்ன சிப்செட் பேக் செய்யப்படும்? இது குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி (Snapdragon 8 Elite SoC) உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது புதிய சிப்செட் குறித்த குவால்காமின் சமீபத்திய டீஸர் ஆனது ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி-ஐ முதலில் அறிமுகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறுகிறது.

அறியாதோர்களுக்கு அக்டோபர் 22 ஆம் தேதி அன்று குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டின் போது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதனை தொடர்ந்து ஷாவ்மீ (Xiaomi), ஒப்போ (Oppo) மற்றும் ஐக்யூ (iQOO) போன்ற நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்த சிப்செட்டை பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் குவால்காம் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவானது பல வகையான ஊகங்களை தூண்டியுள்ளது. அந்த டீசர் வீடியோவில் வரவிருக்கும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை ஒத்த ஒரு வட்ட வடிவிலான கேமரா ஐலேண்ட் கொண்ட "முன்மாதிரி" ஸ்மார்ட்போனை காண முடிகிறது. இதன்மூலம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை பேக் செய்யும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் 13 மாடலும் இருக்கும் என்கிற ஊகங்கள் மேலோங்கியுள்ளன.
அதை இன்னும் உறுதிப்படுத்தும் வண்ணம், ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லூயிஸ் லீ, குவால்காமின் டீசர் விடியோவை சீன சமூக தளமான வெய்போவில் ரீபோஸ்ட செய்துள்ளார். ஆக ஒன்பிளஸ் 13 ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன், உலகளவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, ஷாவ்மீ போன்ற போட்டியாளர்களை விட ஒன்பிளஸ் நிறுவனம் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதை அறிவுறுத்துகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 (Snapdragon 8 Gen 4) சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் இனிமேல் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு முன்னதாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது "மேக்னடிக் சக்ஷன் பங்க்ஷன் உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் ஒன்பிளஸ் 13-ல் மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரவு இருக்கும் என்பதை வெளிப்டையாகவிபே புரிந்துகொள்ள முடிகிறது. இது மேக்சேஃப் (MagSafe) உடன் ஆப்பிள் நிறுவனம் செய்ததை போன்ற ஒரு ஒருங்கிணைந்த பயனர் அனுபவத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, டிப்ஸ்டர் யோகேஷ் ப்ராரின் (@heyitsyogesh) கூற்றுப்படி, ஒன்பிளஸ் 13-ல் மிகப்பெரிய 6000mAh பேட்டரி இடம்பெறலாம். இது ஒன்பிளஸ் 12-ல் பேக் செய்யப்பட்டுள்ள 5400எம்ஏஎச் பேட்டரியுடன் ஒப்பிடும் போது "மிகப்பெரிய" அப்கிரேட் ஆக இருக்கும். இருப்பினும் ஒன்பிளஸ் 13 ஆனது ஒன்பிளஸ் 12 மாடலை போலவே 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் தான் வரும் என்றும் அவர் யூகித்துளார்.
இதுதவிர்த்து ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது பிஓஇ எக்ஸ்2 (BOE X2) டிஸ்பிளேவுடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic Fingerprint Sensor) சேர்க்கப்படலாம். இதன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் சோனி LYT-808 சென்சார் மற்றும் எப்/1.6 அபெக்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். விலை ரூ.65,000 - ரூ.70,000 க்குள் இருக்கலாம். Photo Courtesy: Qualcomm


Click it and Unblock the Notifications








