எதிர்பார்த்ததை விட குறைவான விலையில் வெளியாகும் "ஐபோன் வில்லன்".!

சேரும். அந்நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி-க்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து மிக விரைவில், இன்னும் சொல்லப்போனால் இந்த ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகமாகவுள்ளது.

|

ஹை-எண்ட் அம்சங்களை பட்ஜெட் விலையில் வழங்கி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் மீதான மோகத்தை குறைத்த பெருமை - ஒன்ப்ளஸ் நிறுவனதிற்கே சேரும். அந்நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி-க்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து மிக விரைவில், இன்னும் சொல்லப்போனால் இந்த ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகமாகவுள்ளது.

நேற்று ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வ அம்சங்கள் வெளியாகியுள்ள நிலைப்பாட்டில், தற்போது ஒன்ப்ளஸ் 6-ன் சேமிப்பு மாடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடன் ஒரு தோராயமான விலை நிர்ணயமும் வெளியாகியுள்ளது. முன்னர் வெளியான ஒன்ப்ளஸ் 6 விலைப்புள்ளிகளோடு ஒப்பிடும் போது, சமீபத்திய விலை நிர்ணயம் குறைவானதாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் மூன்று சேமிப்பு மறுபாடுகளில் வெளியாகும்.!

மொத்தம் மூன்று சேமிப்பு மறுபாடுகளில் வெளியாகும்.!

ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒன்ப்ளஸ் 6-ன் மூன்று சேமிப்பு மடல்கள் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. ஒன்ப்ளஸ் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் மூன்று சேமிப்பு மறுபாடுகளில் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் - ஒன்ப்ளஸ் 6 தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம்

6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம்

வெளியான தகவலின்படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடனான 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல்களில் வெளியாகும். ஆண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையிலான ஆக்ஸிஜென்ஸ் 5.1 கொண்டு இயங்கும்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

ஒரு 6.2 இன்ச் புல் எச்டி ப்ளஸ் (2160x1080 பிக்ஸல்கள்; 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம்) டிஸ்பிளே கொண்டிருக்கும். அதாவது சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்ற டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

20எம்பி செல்பீ கேமரா

20எம்பி செல்பீ கேமரா

பின்புறத்தில், ஒரு கைரேகை சென்சார் உடனான எப்1.7 துளை கொண்ட 16எம்பி + 20எம்பி என்கிற டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 20எம்பி செல்பீ கேமராவும் அதில் பேஸ் அன்லாக் அம்சமும் கொண்டுள்ளது.

3450 எம்ஏஎச் பேட்டரி

3450 எம்ஏஎச் பேட்டரி

வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு 3450 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். இதன் டாஷ் சார்ஜ் திறன் ஆனது 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் நிகழ்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சரியும்

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சரியும்

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இதன் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகிய மூன்று சேமிப்பு மாடல்களும் முறையே ரூ.34,132/-க்கும், ரூ.39,305/-க்கும் மற்றும் ரூ.45,510/-க்கும் வெளியாகும். இந்த விலை நிர்ணயம் உண்மையானால், வெளியான உடனேயே ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் கேலக்ஸி எஸ்9, எஸ்9 ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களின் சந்தையை சரிக்கும் என்பது மிக உறுதி.

Best Mobiles in India

English summary
Qualcomm Snapdragon 845-powered OnePlus 6 coming soon: Storage, RAM configuration revealed. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X