வெறும் 15 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகும்; இருந்தாலும் கூட.!

அதாவது 5 நிமிடங்களுக்கான சார்ஜ் ஆனது, 5 மணி நேரம் பேச்சு நேரம் வரை வழங்குமென்று அர்த்தம்.

|

பாஸ்ட் சார்ஜ் 4.0 ஆதரவானது சார்ஜிங் வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மிகவும் திறமையானதாகவும் முந்தைய சார்ஜிங் தொழில்நுட்ப தலைமுறையினரை விட குளிரானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு க்விக் சார்ஜ் 3.0 உடன் ஒப்பிடுகையில், க்விக் சார்ஜ் 4 ஆனது 20% வேகமாக அல்லது 30% அதிக அதிக செயல்திறன் கொண்டதாக உள்ளது. க்வால்காம் வலைத்தளத்தின்படி, இது சார்ஜிங்கின் போது, 5 டிகிரி அளவிலான குளுமையையும் உறுதி செய்கிறது.

வெறும் 15 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகும்; இருந்தாலும் கூட.!

மேலும் பாஸ்ட் சார்ஜ் 4.0 ஆதரவானது பூஜ்யத்திலிருந்து 50% மொபைல் சார்ஜை வெறும் 15 நிமிடங்களில் நிகழ்த்தும். அதாவது 5 நிமிடங்களுக்கான சார்ஜ் ஆனது, 5 மணி நேரம் பேச்சு நேரம் வரை வழங்குமென்று அர்த்தம். இந்த சமீபத்திய தொழில்நுட்பமானது யூஎஸ்.பி டைப்-சி மற்றும் யூஎஸ்பி பவர் டெலிவரி (யூ.எஸ்.பி பிடி) ஆகியவைகளுக்கு இணக்கமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெறும் 15 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகும்; இருந்தாலும் கூட.!

க்வால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனம், கடந்த 2016-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் உடன் இணைந்து செயல்படும் க்வால்காம் க்விக் சார்ஜ் 4.0 பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இருந்தாலும் கூட, 4.0 பாஸ்ட் சார்ஜிங் ஆனது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இன்னும் மோசமான ஆதரவையே அளித்து வருகிறது.

வெறும் 15 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகும்; இருந்தாலும் கூட.!

அதை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வண்ணம், மிக சமீபத்திய சாதனமான சாம்சங் கேலக்ஸி எஸ்9-ல் பழைய பாஸ்ட் சார்ஜிங் 2.0 தான் (மிகவும் பழமையானது) பயன்படுத்தப்பட்டது. இதனை மனதிற்கொண்டு, சான் டியாகோவை அடிப்படையாகக் கொண்ட க்வால்காம் நிறுவனம், அதன் க்விக் சார்ஜ் 4.0 பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை மேம்படுத்தியது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil

அதன் பின்பும் கூட, பாஸ்ட் சார்ஜ் 4.0 இயக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. க்வால்காம் வலைத்தளத்தின்படி - ரேசர் ஃபோன் (முதல் கேமிங் அர்ப்பணிப்பு கொண்ட ஸ்மார்ட்போன்) சமீபத்திய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் ஒரே சாதனமாக காட்சிப்படுகிறது. இக்கருவி ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டதும், இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 மேடையின்கீழ் இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.

வெறும் 15 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகும்; இருந்தாலும் கூட.!

அதனை தொடர்ந்து, சுத்தமாக கவனிக்கப்படாத இசெட்டிஇ நுபியா இசெட்17 ஸ்மார்ட்போன் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இக்கருவியில், பாஸ்ட் சார்ஜ் 4+ ஆதரவு இருப்பதை நிறுவனம் உறுதி செய்யுள்ளது. தவிர எல்ஜி நிறுவனத்தின் வரப்போகும் தலைமை சாதனமான ஜி7 ஸ்மார்ட்போன் ஆனதும் பாஸ்ட் சார்ஜிங் 4.0 ஆதரவு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல ஸ்மார்ட்போன் பிராண்ட்கள்கூட, க்விக் சார்ஜ் C4.0 தரநிலையை கண்டும் காணாதது ஏன் என்று தெரியவில்லை, ஒருவேளை செலவின குறைப்பின் காரணமாக இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Qualcomm Releases Official List of Quick Charge 4.0 Supported Devices. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X