ஜியோ 4ஜி விரைவில் ஜியோ 5ஜி ஆகும்; இதோ ஆதாரம் - உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்.!

|

நேற்று என்ன 4ஜி ரீசார்ஜ் பேக் அறிமுகமாச்சு.? நாளை இன்னும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகுமா.? என்று நாம் இங்கே பேசிக்கொண்டிருக்க கொஞ்சம் கூட சத்தமே போடாமல் "உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை" ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார் க்வால்காம் "ஊழியர்" ஒருவர்.!

உடனே - என்னாது 5ஜி ஸ்மார்ட்போனா.? காமெடி பண்ணாதீங்க.. 4ஜி-யே இங்க ஒழுங்கா கிடைக்கல - என்று ஒரு உடனடி புத்திசாலி போல பேச ஆரம்பித்து விடவேண்டாம். இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் மிக தீவீரமாக நடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இதர உலக நாடுகளை விட மிக விரைவாக 5ஜி தொழில்நுட்பத்தை அடையலாம்.

மாட்ஸர் பிளான் கில்லாடி அம்பானி .!

மாட்ஸர் பிளான் கில்லாடி அம்பானி .!

5ஜி தொழில்நுட்பம் அறிமுகமான கையோடு முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை மிக விரைவில் தத்தெடுக்கும் முதல் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான உருமாறும்.

உயர் தரமான கண்ணாடி இழை கேபிள்.!

உயர் தரமான கண்ணாடி இழை கேபிள்.!

ஏனெனில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் இந்தியாவின் மிகப்பெரிய ஒளியிழை நெட்வொர்க் (fiber optic network) கொண்டது. மொத்தம், 250,000-க்கும் அதிகமான கிமீ நீள உயர் தரமான கண்ணாடி இழை கேபிள், மற்றும் 90,000 சூழல்-நட்பு 4ஜி கோபுரங்கள் வரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவியுள்ளது.

அதிக அலைக்கற்றை மற்றும் அதிவேக இணைய அணுகல்.!

அதிக அலைக்கற்றை மற்றும் அதிவேக இணைய அணுகல்.!

அதில் 288 கேபிள்களை ஜியோ பயன்படுத்திக் கொள்கிறது, அதிக இழைகள் என்றால் அதிக அலைக்கற்றை மற்றும் அதிவேக இணைய அணுகல் என்று அர்த்தம். மற்ற பெரும்பாலான நிறுவனங்களிடம், ரிலையன்ஸ் அளவிலான பைபர் நெட்வொர்க்குகளில் சொந்தமாக கிடையாது. ஒப்பந்தம் மூலமே பிற பைபர் நெட்வெர்க்களை பயன்படுத்தி சேவைகளை வழங்குகின்றன.

ஜியோவிற்கு அவசியமே கிடையாது.!

ஜியோவிற்கு அவசியமே கிடையாது.!

ஆனால் ஜியோ 4ஜிக்கு அந்த அவசியமே கிடையாது. ஜியோ அதன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கேபிள்களை அணுகிக் கொள்ளும். முதலில் மொபைல் டவர்கள் என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். மொபைல் கோபுரங்கள் ஒரு பெரிய அளவிலான வை-பை போன்றது.

பைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் கம்பிகள்

பைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் கம்பிகள்

உங்கள் வீட்டில் வைஃபை கருவியானது உங்களுக்கு இணைய சேவையை வழங்குவது போலத்தான் பைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு பெரிய ஐஎஸ்பி-களாக திகழும் மொபைல் கோபுரங்கள் மூலம் இணைய சேவையை வழங்குகிறது.

முழு டேட்டாவும் பைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம்.!

முழு டேட்டாவும் பைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம்.!

அப்படியாக நீங்கள் 3ஜி அல்லது 4ஜி பயன்படுத்தும் போது ஒரு வயர்லெஸ் வழிமுறையில் நீங்கள் உங்களுக்கான மொபைல் டவர்களை தொடர்பு கொள்கிறீர்கள், டேட்டா கோபுரத்தை அடைந்ததும், அதன் முழு டேட்டாவும் பைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் அனுப்பப்படும். இப்படியாகத்தான் வேகமான 4ஜி சேவையை வழங்க ஃபைபர் பிணைய கேபிள்கள் மிக அத்தியாவசியமான ஒன்றாக திகழ்கிறது, இந்த விடயத்தில் பிற சேவை வழங்குநர்கள் ஒரு பெரிய சங்கடமான சூழலில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டம் 5ஜி தான்.!

அடுத்த கட்டம் 5ஜி தான்.!

ஜியோவிற்கு அடுத்தது 5ஜி தான் வெளிவரும், அடுத்த கட்டம் 5ஜி தான் என்பது நன்றாக தெரியும். அதனால் ரிலையன்ஸ் நிறுவன ஒளியிழை பிணையமானது 4ஜி உடன் சேர்த்து வருங்கால 5ஜிக்கு அப்கிரேட்'தனிற்கு ஏற்றது போல தன்னை மேம்படுத்திக் கொள்கிறது.

க்வால்காம் நிறுவனம் மிகவும் தீவிரமாக பணியாற்று வருகிறது.!

க்வால்காம் நிறுவனம் மிகவும் தீவிரமாக பணியாற்று வருகிறது.!

மறுபக்கம் 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் க்வால்காம் நிறுவனம் மிகவும் தீவிரமாக பணியாற்று வருகிறது. 'ஐந்தாவது தலைமுறை' என்ற விளக்கத்தின் சுருக்கமான 5ஜி தொழில்நுட்பம் கொண்டு நாம் எப்படி தொடர்புகளை மேற்கொள்வோம் என்பதை விட, தொழில்நுட்பம் நம்முடன் எப்படி தொடர்பு கொள்ளப்போகிறது என்பதே சுவாரசியம்.

"நம்புவதற்கு கடினமாக உள்ளது"

அதன் வெளிப்பாடாய் ​​ஷெரிப்ப் ஹன்னா என்ற ஒரு ட்விட்டர் கணக்கின் வழியாக உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் காட்சிப்டுத்தப்பட்டுள்ளது. எல்டிஇ மற்றும் க்வால்காம் 5ஜி என்ஆர் மோடம்களின் மார்க்கெட்டிங் தலைமையான ஹன்னா மூலம் வெளியாகியுள்ள " என் கையில் உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறதுக்கே என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது" என்ற ட்வீட்டை நிச்சயம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

5ஜி செயல்திறனை சோதனையிடவும் மற்றும் மேம்படுத்துவதற்கும்.!

5ஜி செயல்திறனை சோதனையிடவும் மற்றும் மேம்படுத்துவதற்கும்.!

வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த கருவியின் வடிவம் க்வால்காமின் முதல் மிமீவேவ் 5ஜி சாதனத்தின் மாதிரி வடிவமைப்பு போலவே உள்ளது ஆனால் அதுதான் இறுதி வடிவம் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் 5ஜி மிமீவேவ் செயல்திறனை சோதனையிடவும் மற்றும் மேம்படுத்துவதற்கும் நிறுவனம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

2ஜி / 3ஜி / 4ஜி / 5ஜி என்ற மல்டிமோட் ஆதரவு.!

2ஜி / 3ஜி / 4ஜி / 5ஜி என்ற மல்டிமோட் ஆதரவு.!

நேர்த்தியான வடிவமைப்பை கொண்டுள்ள இந்த 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் சின்னம் ஆகியவற்றைக் காண முடிகிறது. மேலும் இந்த சாதனம் 2ஜி / 3ஜி / 4ஜி / 5ஜி ஆகிய மல்டிமோட் ஆதரவை வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஹன்னாவின் ட்வீட் குறிப்பிடுகிறது.

Best Mobiles in India

English summary
Qualcomm employee shows off world's first 5G smartphone on Twitter. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X