கவலையே வேணாம்: ஸ்மார்ட்போனில் இது இருந்தால் போதுமே- 5 நிமிடத்தில் 50% சார்ஜ்!

|

குவால்காம் குவிக் சார்ஜ் 5-ஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இது உலகின் முதல் வணிக 100 ப்ளஸ் சார்ஜிங் அம்சம் என கூறப்படுகிறது.

குவால்காம் ஃபாஸ்ட் சார்ஜ் 5

குவால்காம் ஃபாஸ்ட் சார்ஜ் 5

குவால்காம் ஃபாஸ்ட் சார்ஜ் 5 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் என கூறப்படுகிறது. அதோடு இது 2020-ன் மூன்றாம் காலாண்டுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த மாடலில் இடம்பெறும் என தகவல்கள் தெரியவில்லை.

குவால்காம் ஆண்ட்ராய்டு சாதனங்கள்

குவால்காம் ஆண்ட்ராய்டு சாதனங்கள்

குவால்காம் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான சமீபத்திய வேகமான சார்ஜிங் தீர்வை அறிமுகப்படுத்தப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. குவால்காம் விரைவு சார்ஜிங் 5-ஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் முதல் வணிக 100 ப்ளஸ் சார்ஜிங் தளம் இது என்று கூறுப்படுகிறது. இந்த அறிமுகமானது குவால்காம் சார்ஜிங் தரத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது.

5 நிமிடத்தில் 50 சதவீதம் வரை சார்ஜ்

5 நிமிடத்தில் 50 சதவீதம் வரை சார்ஜ்

குயிக் சார்ஜிங் 5 மூலம் 4500 எம்ஏஹெச் பேட்டரியை சார்ஜ் செய்யும் போது சுமார் 5 நிமிடத்தில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். 70 சதவீதம் அதிக செயல்திறன் கொண்ட இந்த அம்சமானது உலகின் முதல் வணிக 100 ப்ளஸ் சார்ஜிங் அம்சம் என கூறப்படுகிறது.

2020 மூன்றாம் காலாண்டுக்குள்

2020 மூன்றாம் காலாண்டுக்குள்

இந்த புதிய அம்சமானது 20 வோல்ட் மின் விநியோகத்தை ஆதரிக்கும். 2020 மூன்றாம் காலாண்டுக்குள் குயிக் சார்ஜ் 5 தொழில்நுட்பம் கொண்டு வரப்போவதாக சியோமி உறுதிப்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்த சுந்தர் பிச்சை.! 2021 ஜூன் வரை நீட்டிப்பு.!சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்த சுந்தர் பிச்சை.! 2021 ஜூன் வரை நீட்டிப்பு.!

குயிக் சார்ஜ் 5

குயிக் சார்ஜ் 5

குயிக் சார்ஜ் 5 இரட்டை மற்றும் டிரிபிள் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இதுவரை சந்தையில் உள்ள அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தின் சிறந்த விரைவு சார்ஜிங் நுட்பம் இதுவாகும்.

30 வோல்ட் வெளிப்புற சக்தி கட்டுப்பாடுகள்

30 வோல்ட் வெளிப்புற சக்தி கட்டுப்பாடுகள்

ஃபாஸ்ட் சார்ஜிங் 5 ஆனது 25 வோல்ட் யூ.எஸ்.பி-உள்ளீடு ஓவர்வோல்டேஜ் பாதுகாப்பு மற்றும் 30 வோல்ட் வெளிப்புற சக்தி கட்டுப்பாடுகள் உள்ளது. 12 தனித்தனி மின்னழுத்தம், வேகமான சார்ஜிங் இரட்டை / டிரிபிள் சார்ஜ் தொழில்நுட்பத்தோடு ஆதரிக்கிறது.

10 டிகிரி செல்சியஸ் குளிர்வுடன் இயங்கும்

10 டிகிரி செல்சியஸ் குளிர்வுடன் இயங்கும்

தகவமைப்பு உள்ளீட்டு மின்னழுத்தம், ஐஎன்ஒவி 4, குவால்காம் பேட்டரி சேவர் மற்றும் அடாப்டர் திறன் தொழில்நுட்பத்துடன் புதிய குவால்காம் ஸ்மார்ட் அடையாளத்துடன் வருகிறது. குவிக் சார்ஜ் 4 ஐ விட 10 டிகிரி செல்சியஸ் குளிர்வுடன் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Qualcomm announced Quick Charge 5 for Android Device

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X