Home
Mobile

ஒன்பிளஸ் 11 5ஜி-யின் கலைநயம் மிக்க கேமரா திறன்களை சோதனைக்கு உட்படுத்துதல், ஹாசல்பிளாட் பாணியில்!

அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, ஒன்பிளஸ் 11 5ஜி மிகச்சரியான அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. முதன்மையான செயல்திறன், அட்டகாசமான புதிய வடிவமைப்பு மற்றும் ஹசல்பிளாட்-பவர்டு கேமராக்கள் ஆகியவற்றுடன், ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. பல வகையான மதிப்புரைகள் வெளிவந்தபோதிலும், ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா திறன்களை பற்றி பயனர்கள் இன்னும் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

உலகளாவிய தொழில்நுட்ப பிராண்ட் ஆன ஒன்பிளஸ் இந்த ஸ்மார்ட்போனை "கேப்சர் பியாண்ட் பவுண்டரிஸ்" என்கிற தலைப்பின் கீழ் அறிமுகம் செய்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனானது ஹசல்பிளாட் கேமரா அமைப்பின் சரியான காட்சிப்பொருளாகவும் திகழ்கிறது, ஏனென்றால் இது உண்மையாகவே ஸ்மார்ட்போன் புகைப்படக்கலையின் எல்லைகளை நீட்டிக்கின்றது.

ஒன்பிளஸ் 11 5ஜி-யின் கலைநயம் மிக்க கேமரா திறன்கள்!

ஒன்பிளஸின் இந்த பிரச்சாரம் எல்லைகளை தாண்டுவது மட்டுமின்றி, தொழில்நுட்பத்திற்கும் கலைத்திறனுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கிறது; சாதாரணமானவர்களை அசாதாரண கலைஞர்களாக மாற்றுகிறது.

ஒன்பிளஸ் 11 5ஜி உடன் படமாக்கப்பட்ட இந்த படத்தை பார்த்து, நாங்கள் இங்கே என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளும்படி பரிந்துரைக்கிறோம். அதாவது, உங்களின் சொந்த ஒன்பிளஸ் 11 5ஜி மூலம் இதேபோன்ற மேஜிக்கை நீங்கள் உருவாக்குவதற்கான பயணத்தை நாங்கள் தொடங்கி வைக்க உள்ளோம்.

ஒன்பிளஸ் 11 5ஜி மூலம் கலைநயம் மிக்க காட்சிகளை எடுப்பது எப்படி?

வாருங்கள் தனித்துவமான அம்சங்கள் நிஜ உலகில் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை பற்றி பார்ப்போம். ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் ஹசல்பிளாட் கேமரா அமைப்பின் மூலம், உங்களுக்குள் இருக்கும் கலைஞரை வெளியே கொண்டு வந்து வண்ணங்கள், கட்டமைப்புகள் மற்றும் விவரங்களுடன் பரிசோதனை செய்யலாம்.

எடுத்துக்காட்டாக, "எல்லைகளை தாண்டி கைப்பற்றுங்கள்" என்கிற இந்த பிராண்டின் பிரச்சாரத்தில் காணப்பட்ட சில புகைப்படங்களை நாங்கள் மீண்டும் உருவாக்க முயற்சித்தோம். அதாவது நீல நிற மலையில் உள்ள ஒரு ஏரியுடன் இணைந்த கண்கள், ஒரு பொம்மையின் தலைமுடியுடன் சேரும் மரம் என.. இரண்டு வெவ்வேறு புகைப்படங்களை ஒன்றாக இணைக்கும் பரிசோதனையில் இறங்கினோம்.

உண்மையில் இது எளிதானது. இதற்கு தேவையானதெல்லாம் உங்கள் மனதில் ஒரு பார்வையும் உங்கள் கையில் கேமராவும் மட்டுமே.

ஒன்பிளஸ் 11 5ஜி-யின் கலைநயம் மிக்க கேமரா திறன்கள்!

இந்த ஷாட்டுக்காக, ஒவ்வொரு கணத்தையும் ரசிக்கும் அழகிய தத்துவத்தை மீண்டும் உருவாக்க விரும்பினோம். இதற்காக மிகவும் பிரபலமான அனிமேஷன் கதாபாத்திரமான இடடோரியை (பொம்மை) பயன்படுத்தினோம். இந்த பொம்மையின் தலைமுடியை புதிதாக வளரும் மரத்தின் காட்சியுடன் இணைத்தோம். அந்த இலைகள் கூர்மையான இலைகளாக இருந்ததால் அனிமேஷன் கதாபாத்திரத்துடன் நன்றாக ஒற்றுப்போனது. இது ஒரு உருவக இணைப்பாக செயல்படுகிறது, இது புனைகதைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான கோடுகளை மங்கலாக்குகிறது.

இந்த படத்தை உருவாக்க, நாங்கள் ஆட்டோ போர்ட்ரெய்ட் பயன்முறையை தேர்ந்தெடுத்தோம், இந்த பயன்முறையின் கீழ், கேமராவானது மிகவும் புத்திசாலித்தனமாக மரத்தின் தனித்துவமான அம்சங்களை கண்டறிந்தது, கூடவேதனித்துவமான பண்புகள் மூலோபாய ரீதியாக வலியுறுத்தப்படுவதையும் உறுதிசெய்தது. மரத்தை மையமாக வைத்து டிஎஸ்எல்ஆர் போன்ற ஆழமான புலத்தை உருவாக்கவும் இந்த பயன்முறை உதவியது.

இங்கே வெளிச்சம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. குறிப்பிட்ட பொருளின் அம்சங்களை ஒளிர செய்யும் மென்மையான, இயற்கையான ஒளி எங்களுக்கு தேவைப்பட்டது. நாங்கள் பல்வேறு கலவைகளை சோதித்தோம், சிறந்த மரத்தை தேடி சென்றோம், அப்போது தான் பொருளின் அம்சங்களை தனித்து நிற்க அனுமதிக்கும் வகையில் அதை நிலைநிறுத்த முடியும். அதே நேரத்தில் பொருளின் கூர்முனையான முடியை இணைக்க வல்ல இலைகளையும் பயன்படுத்தினோம்.

ஒன்பிளஸ் 11 5ஜி-யின் கலைநயம் மிக்க கேமரா திறன்கள்!

அடுத்ததாக, ஒரு இலையை புகைப்படமாக்கும் போது, போர்ட்ரெய்ட் பயன்முறைக்கு மாறினோம் மற்றும் ஒளிக்கு எதிராக விஷயத்தை படமாக்கினோம். நாங்கள் எடுத்த புகைப்படத்தில் இயற்கையான டெப்த் கிடைத்தது. இலைகளின் நரம்புகளை அழகாக பார்க்க முடிகிறது.

ஷட்டில்காக்கிற்கு, எக்ஸ்போஷரை லாக் செய்து, விவரங்கள் முன்னால் கொண்டு வரப்படுவதை உறுதிசெய்து ஒரு படத்தை உருவாக்கினோம். இதற்கிடையில், ஒரு படி பின்வாங்குவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த பேட்மிண்டன் வீரர் பின்னணியில் இருப்பது போல நிற்க வைக்கப்பட்டார்,

ஏற்கனவே ஈர்க்கப்பட்டதாக உணர்கிறீர்களா?

மே 16, 2023 இல் தொடங்கிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஒன்பிளஸ் நிறுவனத்தின் சேனல்கள் முழுவதும் சிறப்பு சலுகைகள் அணுக கிடைக்கிறது. தங்கள் பாரம்பரிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து ஒன்பிளஸ் 11 5ஜி-க்கு மேம்பட விரும்பும் பயனர்கள் ரூ.5,000 என்கிற மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெறலாம். மேலும், பயனர்கள் பல வங்கிகளில் இருந்து அணுக கிடைக்கும் 12 மாதங்களுக்கான இஎம்ஐ விருப்பங்களையும் பெறலாம்.

ஒன்பிளஸ் 11 5ஜி-யின் கலைநயம் மிக்க கேமரா திறன்கள்!

ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.56,999 மற்றும் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.61,999 ஆகும். இது எமரால்டு க்ரீன் மற்றும் டைட்டன் பிளாக் என்கிற 2 வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. ஸ்மார்ட்போன் வழியாக புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள அனைவரும், சமூக ஊடக தளங்களில் #CaptureBeyondBoundaries என்ற ஹேஷ்டேக் மூலம் "எல்லைகளை தாண்டுங்கள்" என்கிற தனது பிரச்சார கருப்பொருளின் கீழ் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒன்பிளஸ் விரும்புகிறது. உங்களின் சிறந்த முயற்சியை பகிர்வதன் மூலம், ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ ஊடகங்களின் வழியாக உலகளாவிய அங்கீகாரத்தை பெற முடியும். சிறந்த பங்கேற்பாளர்களால் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனை கூட வெல்ல முடியும்.

இன்னமும் நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்களுக்குள் இருக்கும் கலைஞரை வெளியே கொண்டு வாருங்கள்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Putting the OnePlus 11 5G s Artistic Camera Capabilities to Test Hasselblad Style
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X