Home
Mobile

ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் தூக்கத்தை கெடுக்கும் கனவு ஸ்மார்ட்போன்.!

வெளியான புகைப்படத்தில் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு கண்ணாடியை வடிவமைப்பை கொண்டுள்ளது.

By Muthuraj

முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கான முதல் வரிசையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துவைத்திருக்கும் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அதிரடியான ஒன்ப்ளஸ் 5 மற்றும் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போகளின் அறிமுகங்களை தொடர்ந்து, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் பற்றிய லீக்ஸ் புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.

இது நிறுவனத்தின் அடுத்த தலைமை சாதனமாக வெளியாவது மட்டுமின்றி ஆப்பிள், நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களின் தூக்கத்தையும் கெடுக்கும் என்பது போல் தெரிகிறது. அதை வெளியான புகைப்படமும் ஓரளவு உறுதி செய்கிறது.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

வெளியான புகைப்படத்தில் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு கண்ணாடியை வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் அர்த்தம் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அம்சமான வயர்லெஸ் சார்ஜிங்கை ஒன்ப்ளஸ் 6-ல் இனிக்க நிறுவனம் விரும்புகிறது. மேலும் இதுவொரு வியக்கத்தக்க விடயமல்ல, மிகவும் எதிர்பார்ப்பார்க்கப்பட்ட ஒன்றே ஆகும்.

ஸ்க்ரீன்-டூ-பாடி

ஸ்க்ரீன்-டூ-பாடி

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தை பொறுத்தமட்டில், மிகவும் எதிர்பார்க்கப்பட்டபடியே ஐபோன் எக்ஸ் போன்றெதொரு வடிவமைப்பை கொண்டுள்ளது. அதன் விளைவாக ஒன்ப்ளஸ் 5டி உடன் ஒப்பிடும்போது, ஒரு சிறந்த ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை கொண்டுள்ளது.

ஆன்-ஸ்கிரீன் நேவிகேஷன் பொத்தான்

ஆன்-ஸ்கிரீன் நேவிகேஷன் பொத்தான்

மேல் மற்றும் கீழ் பக்கங்களில் "கிட்டத்தட்ட" பெஸல்கள் இல்லாத டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ள ஒன்ப்ளஸ் 6 ஆனது அதன் டிஸ்பிளேவில் ஆன்-ஸ்கிரீன் நேவிகேஷன் பொத்தான்களை கொண்டுள்ளது.

ஆக்ஸிஜன் ஓஎஸ் 5.1.0 ரோம்

ஆக்ஸிஜன் ஓஎஸ் 5.1.0 ரோம்

மேலும் இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 5.1.0 ரோம் கொண்டு இயங்குகிறது. ஆக வெளியாகும் தருணத்தில் தரநிலை மிக்க இயக்கமுறைமையை கொண்டிருக்குமென்று அர்த்தம்.

கேமரா மற்றும் இயர்பீஸ்

கேமரா மற்றும் இயர்பீஸ்

கருவியின் மேல்பக்கத்தில் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் இயர்பீஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் பொத்தான்களுக்கான இடங்களில் மாற்றம் தெரிகிறது. பவர் பொத்தான் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் ஆனது வலதுபுறத்தில் வைக்கப்படுகின்றன, மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் இடதுபக்கத்தில் வைக்கப்படுகின்றன

பின்புற கேமராக்கள்

பின்புற கேமராக்கள்

ஒன்ப்ளஸ் 5 அல்லது 5டி உடன் ஒப்பிடுகையில் இதன் பின்புற வடிவமைப்பு கடுமையாக வேறுபடுகிறது. இரண்டு செங்குத்தாக சீரமைக்கப்பட்ட பின்புற கேமராக்கள், உடன் எல்இடி ப்ளாஷ் மற்றும் செவ்வக வடிவுடைய கைரேகை ஸ்கேனர், அதன் கீழே ஒன்ப்ளஸ் லோகோ உள்ளது.

ஸ்னாப்டிராகன் 845

ஸ்னாப்டிராகன் 845

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 மொபைல் பிளாட்பார்ம் மூலம் தான் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் என்பதை ஒன்ப்ளஸ் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. ஆக இந்த சிப்செட், ஒன்ப்ளஸ் 6-க்கு கூடுதல் அம்சங்களை சேர்க்க உறுதுணையாக இருக்கும்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
இறுதி தயாரிப்பு அல்ல

இறுதி தயாரிப்பு அல்ல

இது ஒரு ஆன்லைன் லீக்ஸ் என்பதையும், இறுதி தயாரிப்பு அல்ல என்பதையும் மீண்டும் ஒருமுறை அறிவுறுத்த விரும்புகிறோம். எனவே சிட்டிகையில் இருந்து உப்பை கிள்ளிக்கொள்வது போல இந்த லீக்ஸை அம்சங்களை எடுத்துக்கொள்ளுமாறும் பரிந்துரைக்கிறோம். மேலும் பல ஸ்மார்ட்போன் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Purported Real Life Images of OnePlus 6 Leaked, Shows Off Notch and Glass Body. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X