மே 16: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா எக்ஸ் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் மே மாதம் 16-ம் தேதி மிகவும் எதிர்பார்த்த நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சில அம்சங்களை கொண்டுள்ளது எனத் தெரவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.
நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின்பு ஐபோனில் உள்ள சில அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கிய எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா எக்ஸ் :
நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.8-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போன்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பா இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


3500எம்ஏஎச்:
நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications