பொறுத்தது போதும் : வெளியாகிறது மடங்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

|

மிகவும் புறக்கணிப்பட்டு, பல ஆண்டுகளாய் மிக அமைதியாய் திட்டங்களை வகுத்த நோக்கியா நிறுவனமே அதன் ஸ்மார்ட்போன்களை வரிசைக்கட்டி அறிமுகம் செய்துகொண்டிருக்கும் போது சாம்சங் நிறுவனம் அதன் கனவு திட்டமாக கருதும் போல்டபில் ஸ்மார்ட்போன் அதாவது மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியாவதில் எந்த ஆச்சரியமும் இல்லை, எதிர்பார்ப்புகள் தான் எக்கச்சக்கமாய் உள்ளது.

பொறுத்தது போதும் : வெளியாகிறது மடங்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

அப்படியாக சாம்சங் நிறுவனம் அதன் கனவு ஸ்மார்ட்போனின் ஒரு உண்மையானதயாரிப்பு வடிவத்தை எவ்வளவு நெருங்கி விட்டது.? எப்போது வெளியாகும்.? போல்டபில் கருவி எப்படி இருக்கும்.? - என்பதை பற்றிய தொகுப்பே இது.!

அறிக்கை

அறிக்கை

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அதன் போல்டபில் கைப்பேசிகளின் அலகுகளின் உற்பத்தி முன்மாதிரிய இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கும் என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

கருத்து

கருத்து

ஆயிரக்கணக்கான அலகுகள் உருவாக்கப்பட்டு கருத்துக்களை அறியும் நோக்கத்தில் நிறுவனத்தின் கேரியர் நிறுவனங்கள் உட்பட அனைத்து பார்ட்னர்களுக்கும் இந்த கருவி வழங்கப்படும் என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பின்னர் அந்த கருத்துக்கள் அடிப்படையில் மாற்றங்களை கொண்டு சாம்சங் கருவியானது ஒரு பலமான வெகுஜன உற்பத்தியை துவங்கும்.

உற்பத்தி

உற்பத்தி

மேலும் அறிக்கையின்படி, எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றால் சாம்சங் அதன் போல்டபில் ஸ்மார்ட்போனின் வெகுஜன உற்பத்தியை அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறியுள்ளது.

நெருக்கமான கண்

நெருக்கமான கண்

மேலும் இந்த தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனம் டிஸ்ப்ளே உற்பத்தியில் அதன் போட்டியாளர்களான போ, விஷனாக்ஸ் மற்றும் ஏயூஓ போன்ற சீன நிறுவனங்கள் மீது நெருக்கமான கண் வைத்து இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உடன் லெனோவா, ஒப்போ மற்றும் விவோ போன்ற நிறுவனங்களுடன் ஒரு நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

தயார்

தயார்

மேலும், சாம்சங் அதன் வழக்கமான தலைமை ஸ்மார்ட்போன்கள் விட ஒரு படி அதிகமாக அதன் போல்டபில் கருவிகளை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் இக்கருவிகள் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ கருவிகளை விட அதிக விலை கொண்டிருக்கும் என்று மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.

போல்டபில் காப்புரிமை

போல்டபில் காப்புரிமை

உடன் இம்மாதிரியான நெகிழ்வான ஸ்மார்ட்போன்கள் சார்ந்த வேலையில் சாம்சங் மட்டுமே வேலை செய்யவில்லை. ஆப்பிள், எல்ஜி மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் கூட கடந்த சில ஆண்டுகளாக இதேபோன்ற போல்டபில் காப்புரிமைகளை விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லெனோவா

லெனோவா

குறிப்பிடும் வண்ணம் லெனோவா கடந்த ஆண்டு அதன் லெனோவா தொழில்நுட்ப நிகழ்ச்சியில் நெகிழ்வான காட்சிகள் கொண்ட அதன் வியரபிள் சாதனங்களை காட்சிப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இந்தியாவில் இப்போதும் கிடைக்கும் அலங்கரிக்கப்பட்ட நோக்கியா போன்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Production of Samsung’s foldable prototype smartphone to start this year. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X