Home
Mobile

விலை குறைப்பு.. OnePlus 13s அறிமுகமானதும் Amazon, Flipkart இல் OnePlus 13, OnePlus 13R-ன் புதிய விலைகள்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வேகத்தில்.. இதே ஒன்பிளஸ் 13 சீரிஸின் கீழ் உள்ள மற்ற மாடல்களின் மீது நீங்கள் அபார விலை குறைப்பு அல்லது மெகா டிஸ்கவுன்ட்டை எதிர்பார்த்து காத்திருந்தால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்க்கு தான் வந்துளீர்கள்.

இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ரூ.54,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில்.. இதற்கு முன்பாக முறையே ரூ.69,999 க்கும் மற்றும் ரூ.42,999 க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்கள் தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைத்தளங்களில் என்னென்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது என்கிற விவரங்கள் இதோ:

Amazon, Flipkart இல் OnePlus 13, OnePlus 13R-ன் புதிய விலைகள்!

ஒன்பிளஸ் 13எஸ் அறிமுகத்திற்கு பிறகான விலை குறைப்பில் அமேசான் இந்தியா வலைத்தளம் நம்மை எல்லாம் ஏமாற்றி விட்டது என்றே கூற வேண்டும். அமேசான் இந்தியாவானது ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் மாடல்கள் மீது வெறும் ரூ.1 விலை குறைப்பை அறிவித்து, ரூ.69,998 மற்றும் ரூ.42,998 க்கு விற்பனை செய்கிறது. ஆனால் பிளிப்கார்ட் வலைத்தளம் 2 மாடல்கள் மீதுமே நல்ல நேரடி தள்ளுபடிகளை வழங்குகிறது. பிளிப்கார்ட்டில் தற்போது ஒன்பிளஸ் 13 மாடல் ரூ.65,999 க்கும் மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் மாடல் ரூ.39,975 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதி 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது. இதோடு 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5 செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமராவும் உள்ளது. கடைசியாக 1/1.95-இன்ச் எல்ஒய்டி600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது

முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கான மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் கேஸ்கள் தனியாக வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது!

Best Mobiles in India

English summary
Prices of OnePlus 13 OnePlus 13R in Amazon Flipkart After OnePlus 13s Launched in India For Rs 54999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X