சத்தமின்றி ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலை உயர்வு.!
ரெட்மி நிறுவனம் தொடர்ந்து தனது சாதனங்களுக்கு விலை உயர்வை அறிவித்து வருகிறது. அதேபோல் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000 விலை உயர்த்தப்பட்டு ரூ. 17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் சிப்செட்,5020 எம்ஏஎச் பேட்டரி உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அம்சங்களைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி/ 6ஜிபி ரேம் உடன் வருகிறது. மெமரிவிரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

அதேபோல் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸப்ளே எச்டிஆர் 10 ஆதரவை கொண்டிருக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. குவாட் கேமரா அமைப்போடு இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ ஷூட்டர் கேமரா மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் உடன் வருகிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான அம்சங்களோடு பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. சிறந்த அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.


Click it and Unblock the Notifications