Home
Mobile

திடீரென ரெட்மி 9ஏ, ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன்களுக்கு விலை உயர்வு.!

இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி 9ஏ, ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனங்களின் புதிய விலைகள் அமேசான் மற்றும் சியோமி வலைத்தளங்களில்
பிரதிபலிக்கிறது.

ரெட்மி 9ஏ

ரெட்மி 9ஏ

  • 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.7,299-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
  • 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,999-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.8,299-விலையில் விற்பனைசெய்யப்படுகிறது.
  • ரெட்மி 9ஏ ஸ்போர்ட்

    ரெட்மி 9ஏ ஸ்போர்ட்

    2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.7,299-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,999-ஆக இருந்தது, தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.8,299-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ரெட்மி 9ஏ அம்சங்கள்

    ரெட்மி 9ஏ அம்சங்கள்

    ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 9ஏ மாடல். அதேபோல் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதி உடன் IMG PowerVR GE8320 GPU இடம்பெற்றுள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த
    ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது..

    ரெட்மி 9ஏ ஸ்

    ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 5எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது எனவே
    சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதிக நேரம் பயன்படுத்த முடியும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ப்ளூடூத் 5, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் + க்ளோனஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்.

    குறிப்பாக ரெட்மி 9ஏ

    குறிப்பாக ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் AI பேஸ் அன்லாக் அம்சத்தை ஆதரிக்கிறது மற்றும் P2i பூச்சுடன் வருகிறது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் எடை 194 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

    ரெட்மி 9ஏ ஸ்போர்ட் அம்சங்கள்

    ரெட்மி 9ஏ ஸ்போர்ட் அம்சங்கள்

    ரெட்மி 9ஏ ஸ்போர்ட் மாடல் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன்வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் வசதியை அடிப்படையாக
    கொண்டு வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

    ரெட்மி 9ஏ ஸ்போர்ட்

    குறிப்பாக ரெட்மி 9ஏ ஸ்போர்ட் மாடலில் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான MIUI 12 வசதி உள்ளது. மேலும் இந்தஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஏஐ ஃபேஸ் அன்லாக் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்தரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Price increase for Redmi 9A and Redmi 9A Sport smartphones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X