மிரளுது அமேசான்.. ரூ.29,000 விலை குறைப்பு.. அடிமட்ட ரேட்ல சாம்சங்.. OIS கேமரா.. 4000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஆஃபர்னு சொன்ன இப்படி இருக்கனும் என்று அடித்து சொல்லும்படி ரூ.29,000 விலை குறைப்பில் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 4000mAh பேட்டரி, 25W சார்ஜிங் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) போன் கிடைக்கிறது. ரூ.79,999 பட்ஜெட்டில் வெளியான இந்த போன் இப்போது வெறும் ரூ.50,999 விலைக்கு கிடைக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்களுடன் இந்த எஸ்24 மாடல் கிடைக்கிறது. ஆகவே, லைவ்-டிரான்ஸ்லேட் (Live Translate), சாட் அசிஸ்ட் (Chat Assist), நோட் அசிஸ்ட் (Note Assist), டிரான்ஸ்கிரிப்ட் அசிஸ்ட் (Transcript Assist) மற்றும் சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) பீச்சர்களை பயன்படுத்தலாம். இந்த பீச்சர்களுடன் ஒன் யுஐ 6.1 (One UI 6.1) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அம்சங்கள் (Samsung Galaxy S24 Specifications): இந்த சாம்சங்கில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் மற்றும் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.
மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் வருகிறது. டிஸ்பிளேவில் பிரீமியமாக அவுட்புட் கொடுக்கும்படி பீச்சர்கள் இருக்கின்றன. 6.2 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
இந்த டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே பேனலுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு வந்துள்ளது. எஸ்டி கார்டு சிலாட் இல்லை, ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டுமே வருகிறது. ஏஐ பீச்சர்களுக்கு ஏற்ப கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் + 12 எம்பி அல்ட்ரா வைடு + 10 எம்பி டெலிபோட்டோ இருக்கிறது.
8K வீடியோ ரெக்கார்டிங், ஆப்டிகல் ஜூமிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ கேமராவை பேக் செய்துள்ளது. அண்டர் வாட்டர் கேமரா அவுட்புட் கொடுக்க IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஹேண்டி பாடி மற்றும் லுக் கொடுப்பதால், 4000mAh பேட்டரி மட்டுமே வருகிறது. 25W சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.
மேலும், இந்த பேட்டரிக்கு வயர்லெஸ் பவர்ஷேரிங் சப்போர்ட் உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆக இருந்தது. ஆனால், இப்போது, ரூ.29,900 விலை குறைப்பில் ஆர்டருக்கு வந்துள்ளது. இந்த டிஸ்கவுண்ட் பெற டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் தேவையில்லை. ஆகவே, ரூ.50,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








