இதுவரை கிடைக்காத டிஸ்கவுண்ட்.. iPhone 13 மாடல் வாங்க பக்காவான நேரம்.. இதை விட்ராதீங்க.. 128 ஜிபி வேரியண்ட்!
இதைவிட கம்மி விலைக்கு கிடைக்காது என்று சொல்லும்படி ரூ.36,046 விலை குறைப்பில் ஐபோன் 13 (iPhone 13) விற்பனைக்கு வந்துள்ளது. 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) அடிமட்ட விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஐபோன் 13 மாடலுக்கு கிடைக்கும் பீச்சர்கள், டிஸ்கவுண்ட் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஐபோன் 13 போனின் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.79,900 பட்ஜெட்டில் வெளியானது. இதற்கு பிறகு ஐபோன் 16 வரையில் அப்டேட் மாடல்கள் வந்துவிட்டதால், இதன் விலை நம்ப முடியாத அளவுக்கு குறைந்துள்ளது. இருப்பினும், இது கேமராவில் பின்னிப்பெடல் எடுப்பதால், இன்றளவும் மவுசு குறையாமல் இருக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ஆர்டர் செய்தால் வெறும் ரூ.44,749 விலைக்கு கிடைக்கிறது. அதுவே, கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் ஆர்டர் செய்தால், கூடுதலாக ரூ.895 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஐபோன் 13 மாடலை ரூ.36,046 விலை குறைப்பில் ரூ.43,854 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.
ஐபோன் 13 அம்சங்கள் (iPhone 13 Specifications): இந்த ஐபோனில் ஐஓஎஸ் 15 (iOS 15) கொண்ட 5என்எம் பயோனிக் சிக்ஸ் கோர் ஏ15 (5nm Bionic Six Core A15) சிப்செட் கிடைக்கிறது. 16 கோர் நியூரல் என்ஜின் பேக் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 256 ஜிபி மெமரி, 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கின்றன.
டிஸ்பிளேவில் ஓஎல்இடி (OLED) பேனலுடன் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. 6.1 இன்ச் (2532 × 1170 பிக்சல்கள்) ரெடினா எக்ஸ்டிஆர் (Retina XDR) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு செராமிக் ஷீல்டு (Ceramic Shield) பாதுகாப்பு மற்றும் ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் கிடைக்கிறது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிஆர் (HDR) வருகிறது. இந்த டிஸ்பிளேவை போலவே கேமரா பீச்சர்களும் மூக்கில் விரல் வைக்க செய்கின்றன. ஆகவே, சென்சார்-ஷிப்ட் ஓஐஎஸ் (Sensor-shift OIS) சப்போர்ட் கொண்ட 12 எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் சிஸ்டம் கிடைக்கிறது.
இந்த கேமராவில் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 4K ரெசொலூஷனில் டால்பி விஷனில் ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். இந்த போனில் 12 எம்பி ட்ரூடெப்த் செல்பீ கேமரா வருகிறது. வைடு ஆங்கிள் கேமராவில் ட்ரூ டோன் ஃபிளாஷ் (True Tone Flash) மற்றும் செல்பீயில் ரெடினா ஃபிளாஷ் (Retina Flash) கிடைக்கிறது.
இந்த ஐபோன் 13 போனில் 19 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும் லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இந்த பேட்டரிக்கு ஏற்ப 7.65 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. அதேபோல எடையும் 173 கிராமாக மட்டுமே இருக்கிறது.
மற்ற பீச்சர்களை பார்க்கையில், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. அதேபோல 5ஜி (5G), எல்டிஇ (LTE), வை-பை 6 (Wi‑Fi 6), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது. ஓஎஸ் மற்றும் பேட்டரி பேக்கப் தேவையில்லை, பிரீமியம் கேமரா போதும் என்றால் இந்த மாடலை ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








