Home
Mobile

ரூ.2000 டிஸ்கவுண்ட்.. மொத்தம் 6 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்.. Nothing Phone 3a, Nothing Phone 3a Pro விலைகள் லீக்!

நத்திங் (Nothing) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) மாடல்கள் இன்று (மார்ச் 4 ஆம் தேதி) மாலை, இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தொடங்கும் வெளியீட்டு நிகழ்வில் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதற்கிடையில் நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆகிய 2 மாடல்களின் ரேம் + இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், இந்திய விலை விவரங்கள் மற்றும் அறிமுக சலுகைகள் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன. அதுகுறித்த விவரங்கள் இதோ:

Nothing Phone 3a, Nothing Phone 3a Pro விலைகள் லீக்!

நத்திங் போன் 3ஏ விலை விவரங்கள்: ஸ்மார்ட்ப்ரைஸ் (Smartprix) வழியாக வெளியான தகவலின்படி நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகமாகும். அடுத்ததாக உள்ள 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கும் மற்றும் கடைசியாக உள்ள 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.28,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

நத்திங் போன் 3ஏ ப்ரோ விலை விவரங்கள்: நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆப்ஷன் ரூ.31,999 க்கு அறிமுகமாகும். அடுத்ததாக உள்ள 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.33,999 க்கும் மற்றும் கடைசியாக உள்ள 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.35,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

மேற்கண்ட விலை விவரங்கள் நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோவின் எம்ஆர்பி விலைகளாக (MRP Price) இருக்கும். ஆக அறிமுக சலுகையாக எம்ஆர்பி விலையில் இருந்து ரூ.2,000 வரை குறைக்கக்கூடிய வங்கி தள்ளுபடி (Bank Discount) அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

நத்திங் போன் 3ஏ சீரீஸ் வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீம் செய்வது எப்படி? முன்னரே குறிப்பிட்டபடி இது இன்று (மார்ச் 4, 2025) மாலை, இந்திய நேரப்படி 3:30 மணிக்கு அறிமுகமாகும் இந்நிகழ்ச்சி நத்திங் நிறுவனத்தின் யூடியூப் சேனல் மற்றும் பிளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாக இதுவரை வெளியான எந்த ஒரு நத்திங் போனிலும் இல்லாத பெரிய டிஸ்பிளே இதில் இடம்பெறும்.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனில் உள்ள மீடியாடெக் டைமன்சிட்டி (MediaTek Dimensity) சிப்செட்டை விட நிச்சயம் சிறந்ததாக இருக்கும். மேலும் இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங் ஓஎஸ் 3.1 (Nothing OS 3.1) உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கேமராக்களை பொறுத்தவரை, இது கிடைமட்டமாக அமைக்கப்பட்ட நத்திங் நிறுவனத்தின் முதல் ட்ரிபிள் ரியர் கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கலாம். அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். இது உண்மையாகும் பட்சத்தில், நத்திங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் முதல் முறையாக டெலிஃபோட்டோ லென்ஸை சேர்க்கிறது என்று அர்த்தம்.

செல்பீ கேமராவை பொறுத்தவரை இதில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். இது டிஸ்பிளேவின் ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் வைக்கப்படும். அதாவது முந்தைய நத்திங் மாடல்களில் நாம் கண்டதை போலவே. பேட்டரியை பொறுத்தவரை, இதை 45W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAhபேட்டரி பேக் செய்யப்படலாம். மறுகையில் உள்ள நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பெரிய அளவிலான தகவல்கள் எதுவும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Price details of Nothing Phone 3a Nothing Phone 3a Pro Leaked Ahead Today March 4 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X