ரூ.4000/- வரை விலைக்குறைப்பு; ஆளுக்கொரு கூல்பேட் அள்ளிக்கோங்க.!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான கூல்பேட் அதன் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் - கூல்பேட் கூல் 1, கூல்பேட் நோட் 5 மற்றும் கூல்பேட் நோட் 5 லைட் - ஆகியவற்றில் பெரும் விலை குறைப்புக்களை அறிவித்துள்ளது.

|

விலை குறைப்பிற்கு பின்னர், கூல்பேட் கூல் 1 ஆனது இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 652 எஸ்ஓசி கொண்டு இயங்கும் மிக மலிவான ஸ்மார்ட்போனாக திகழ்கிறது. கூல்பேட் கூல் 1 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாறுபாடானது வெறும் ரூ.7,999/-க்கு கிடைக்கிறது. மறுகையில் உள்ள அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மாடல் ஆனது ரூ.8,999/-க்கு வாங்க கிடைக்கும்.

ரூ.4000/- வரை விலைக்குறைப்பு; ஆளுக்கொரு கூல்பேட் அள்ளிக்கோங்க.!

பிரபல இ-காமர்ஸ் தலமான அமேசான் இந்தியாவில் ஏற்கனவே விலை குறைப்பு நடைமுறையில் உள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் இந்தியா வலைத்தளத்தை அணுகவும். கூல்பேட் கூல் 1 தவிர்த்து இதர என்னென்ன கருவிகளுக்கு, என்னென்ன விலைக்குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதென்பதை விரிவாக காண்போம்.

இப்போது ரூ.7,999/-க்கு

இப்போது ரூ.7,999/-க்கு

ரூ.11,999/-க்கு அறிமுகமான கூல்பட் நோட் 5 ஸ்மார்ட்போன் பற்றி பேசுகையில், இக்கருவி இப்போது ரூ.7,999/-க்கு வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள கூல்பேட் 5 லைட் ஆனது விலைக்குறைப்பிற்கு பின்னர் வெறும் ரூ.5,999/-க்கு விலை ஏற்கனவே விற்பனையாகு கிடைக்கிறது.

கூல்பட் கூல் ப்ளே 6

கூல்பட் கூல் ப்ளே 6

துரதிர்ஷவசமாக 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட கூல்பட் கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போனிற்கு எந்தவிதமான விலைக்குறைப்பும் அறிவிக்கப்படவில்லை.இக்கருவி அறிமுக விளையான ரூ.14,999/-க்கு வாங்க கிடைக்கிறது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652 எஸ்ஓசி

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652 எஸ்ஓசி

நினைவூட்டும் வண்ணம், கூல்பேட் கூல் 1 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2016 இறுதியில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. அம்சங்களை பொறுத்தமட்டில், இது 5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652 எஸ்ஓசி ஆகியவைகளை கொண்ட இது 3ஜிபி ரேம் + 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கின்றன.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

கூல்பேட் கூல் 1 ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம்சமாக அதன் இரட்டை கேமரா அமைப்பு திகழ்கிறது. இதன் பின்புறத்தில் இரண்டு 13எம்பி சென்சார்கள் உள்ளன மற்றும் அவைகள் 4கே வீடியோ பதிவை ஆதரிக்கிறது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. இக்கருவி ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

இந்தியாவின் மலிவான ஸ்மார்ட்போன்

இந்தியாவின் மலிவான ஸ்மார்ட்போன்

கூல்பேட் நோட் 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், இது 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 617 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் கொண்ட இந்தியாவின் மலிவான ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips
4010எம்ஏஎச் பேட்டரி

4010எம்ஏஎச் பேட்டரி

ஒரு 13எம்பி பின்பக்க கேமரா மற்றும் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பீக்களுக்கான ஒரு 8எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்குகிறது மற்றும் ஒரு 4010எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே

5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே

இறுதியாக, கூல்பாட் நோட் 5 லைட் அம்சங்களை பொறுத்தமட்டில், 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி6735 சிபி சிப்செட், 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பு, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 2500எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஐடியா செல்லுலர் மற்றும் வோடாபோன் இந்தியா

ஐடியா செல்லுலர் மற்றும் வோடாபோன் இந்தியா

விலை குறைப்புகளுடன் கூல்பேட் கருவிகள் மீதான ஐடியா செல்லுலர் மற்றும் வோடாபோன் இந்தியா சலுகை வாய்ப்பும் கிடைக்கிறது. அதாவது மேற்கூறப்பட்டுள்ள மூன்று கருவிகளுக்கும் ஐடியா கூடுதலாக 28ஜிபி டேட்டாவை அளிக்கிறது மறுகையில் உள்ள வோடாபோன் இந்தியாவானது கூடுதலாக 45ஜிபி டேட்டாவை அளிக்கிறது.

Best Mobiles in India

English summary
Coolpad Cool 1 With Snapdragon 652 SoC Receives a Price Cut, Now Retailing for Rs 7,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X