OnePlus 10R 5G போனை வாங்க சரியான நேரம்: நம்பமுடியாத விலை குறைப்பு..முந்துங்கள்.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி (OnePlus 10R 5G) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி
அதாவது அமேசான் தளத்தில் நடைபெறும் Amazon Fab Phones எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும்ஜூன் 30 தேதி வரை இருக்கும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்க
முடியும்.

அதிரடி விலைகுறைப்பு
அமேசான் தளத்தில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடி கிடைக்கும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.38,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த போனை ரூ.34,999-விலையில் வாங்க முடியும்.

அதேபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் அசல் விலை ரூ.42,999-ஆக உள்ளது. ஆனால் அமேசானில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இதை ரூ.38,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் சூப்பர் டிஸ்பிளே
ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பெரிய டிஸ்பிளேவுடன் தான் வெளிவந்துள்ளது. அதாவது இந்த போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2400 X 1080 பிக்சல்கள், 20:9 ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்
சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி .

சிப்செட் வசதிக்கு தனிகவனம்
டிஸ்பிளேவை விட இதன் சிப்செட் வசதி தான் அருமையாக உள்ளது. அதாவது மீடியாடெக் Dimensity 8100 Max சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் இயக்குவதற்கு அருமையாக இருக்கும்.

குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற அனைத்து தேவைகளுக்கு இந்த சாதனம் மிக அருமையாக பயன்படும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மொத்தமாக இந்த போனின் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஒன்பிளஸ் நிறுவனம்.

ட்ரிபிள் ரியர் கேமரா
ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. குறிப்பாக குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் கூட அருமையான படங்களை
எடுக்க உதவுகிறது இதன் கேமராக்கள்.

அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இஐஎஸ் ஆதரவு கொண்ட 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதன் உதவியுடன் அருமையான செல்பீ படங்களை எடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றம் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன்.

நீண்ட நேரம் கேம் விளையாடலாம்
இந்த ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். எனவே நீங்கள் அதிக நேரம் கேம் விளையாடலாம். அதேபோல் 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். குறிப்பாக சிறிது நேரத்தில் இந்த போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

மேலும் இந்த சாதனம் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் சியரா பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. மொத்தமாக ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி போன் அருமையான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இப்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications