நம்பவே முடியல.. இந்த 'ஸ்லிம்' போனோட விலை இப்போ ரூ.10,000-க்கும் கம்மி!

|

என்னதான் ஆசைப்பட்டு வாங்கிய ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, ஏதாவது ஒரு கட்டத்தில்.. "ஏற்கனவே வெயிட்டா இருக்கு! இதுல பேக் கேஸ் வேற?" - என்று நிச்சயம் சலிப்படைந்து இருப்போம்!

இப்படியாக நம்மில் பலரும் "ஒப்பீட்டளவில்" சற்றே கனமான ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்தி வருகிறோம்!

இதுக்கு ஒரு எண்டு கார்ட் இல்லையா?

இதுக்கு ஒரு எண்டு கார்ட் இல்லையா?

இருக்கிறது! கனமான ஸ்மார்ட்போன் தொடர்பான "இம்சையில்" இருந்து விடுபட உங்களுக்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று மொபைல் கேஸை கழட்டி போட்டுவிட்டு, உங்கள் ஸ்மார்ட்போனின் எடையை கொஞ்சம் குறைக்கலாம்!

இல்லையேல் - பட்ஜெட் விலையில்.. ஸ்லிம் ஆன.. மிகவும் லைட் ஆன ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்கலாம்!

நியாயமான விலைக்கு உலகின் முதல் 17.3-inch ஃபோல்டபிள் லேப்டாப் அறிமுகம்!நியாயமான விலைக்கு உலகின் முதல் 17.3-inch ஃபோல்டபிள் லேப்டாப் அறிமுகம்!

ஸ்லிம்.. லைட்.. பட்ஜெட்-ஆ? அப்படி ஒரு போன் இருக்கா?

ஸ்லிம்.. லைட்.. பட்ஜெட்-ஆ? அப்படி ஒரு போன் இருக்கா?

இருக்கிறது! Oppo நிறுவனத்திடம் அப்படி ஒரு ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஸ்லிம் அன்ட் ஸ்லீக் டிசைனில் வெறும் 175 கிராம் எடையுடன் வரும், பட்ஜெட் விலையிலான ஒரு ஒப்போ ஸ்மார்ட்போன் இருக்கிறது.

இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், தற்போது அந்த ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பும் அணுக கிடைக்கிறது.

அதென்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை விவரங்கள் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அது Oppo A15s மாடல் ஆகும்!

அது Oppo A15s மாடல் ஆகும்!

ஆம்! சமீபத்தில் அதன் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன Oppo A96 மாடலின் விலையை குறைத்த கையோடு, இந்நிறுவனம் அதன் ​​பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ ஏ15எஸ் மாடலின் விலையையும் குறைத்து உள்ளது.

நினைவூட்டும் வண்ணம், ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன், கடந்த 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது ரூ.1,500 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது!

ஸ்மார்ட் வாட்ச் அலெர்ட்! செப்.7 வரை பொறுமை அவசியம்! ஏனென்றால்?ஸ்மார்ட் வாட்ச் அலெர்ட்! செப்.7 வரை பொறுமை அவசியம்! ஏனென்றால்?

Oppo A15s ஸ்மார்ட்போனின் பழைய விலை Vs புதிய விலை:

Oppo A15s ஸ்மார்ட்போனின் பழைய விலை Vs புதிய விலை:

ஒப்போ 15s ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வாங்க கிடைக்கிறது: ஒன்று - 4GB + 64GB; மற்றொன்று 4GB + 128GB.

முன்னதாக இந்த இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் முறையே ரூ.11,490 மற்றும் ரூ.12,490 க்கு வாங்க கிடைத்தன. ஆனால் ரூ.1,500 என்கிற விலைக் குறைப்பிற்கு பின்னர், 64ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.9,990 க்கும், 128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.10,990 க்கும் விற்கப்படுகிறது.

இந்த புதிய விலை ஒப்போ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Amazon ஆகிய இரண்டிலுமே பிரதிபலிக்கிறது!

ரூ.9,990 க்கு Oppo A15s வொர்த்-ஆ?

ரூ.9,990 க்கு Oppo A15s வொர்த்-ஆ?

ஒப்போ ஏ15எஸ் ஆனது விலைக்கு ஏற்ற ஸ்மார்ட்போனா? இல்லையா? என்பதை புரிந்துகொள்ள, முதலில் நாம் அதன் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்! பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும்!

பட்ஜெட் விலையில் வரும் ஒப்போ ஏ15எஸ் ஆனது MediaTek Helio P35 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது 60Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.52-இன்ச் அளவிலான HD+ டிஸ்பிளேவை, வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பின் கீழ் கொண்டுள்ளது.

கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

ஒப்போ A15s ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 13MP மெயின் (f/2.2) கேமரா + 2MP மேக்ரோ (f/2.4) சென்சார் + 2MP டெப்த் (f/2.4) சென்சார் உள்ளன.

இதன் ரியர் கேமராவானது, கலர் பில்டர் மோட், பனோரமா மோட், டைம்லேப்ஸ் மோட் போன்ற கேமரா மோட்களையும் வழங்குகிறது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 5MP செல்பீ (f/2.4) கேமரா உள்ளது. இது AI பியூடிப்பை ஆதரவை கொண்டுள்ளது!

ஓஎஸ், பேட்டரி எல்லாம் எப்படி?

ஓஎஸ், பேட்டரி எல்லாம் எப்படி?

ஒப்போ ஏ 15எஸ் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ColorOS 7.2-இன் கீழ் இயங்குகிறது.

கடைசியாக இது 4100mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது மற்றும் முன்னரே குறிப்பிட்டபடி, Oppo A15s-இன் எடை 175 கிராம் ஆகும்.

சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!

இப்போ சொல்லுங்க வாங்குவீங்களா? மாட்டீங்களா?

இப்போ சொல்லுங்க வாங்குவீங்களா? மாட்டீங்களா?

மேற்கண்ட அம்சங்களின் வழியாக உங்களுக்கு எதெல்லாம் போதும்; எதெல்லாம் போதாது என்கிற முடிவுக்கு வந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

அப்படியே இந்த ஸ்லிம் அன்ட் ஸ்லீக் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா என்கிற முடிவுக்கும் வந்து விடவும்!

Best Mobiles in India

English summary
Price Cut Alert Best Budget Smartphone Oppo A15s Now Available Under Rs 10000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X