Home
Mobile

iPhone 14 அறிமுகமான வேகத்தில் iPhone 13 மீது நம்ப முடியாத Price Cut!

Apple நிறுவனம் நேற்று (செப்.7) இரவு நடந்த Far Out நிகழ்வில், அதன் புதிய ஐபோன் 14 சீரீஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.

சுவாரசியமாக புதிய ஐபோன் மாடல்கள் அவற்றின் முந்தைய ஜெனரேஷன் மாடல்களை விட அதிக விலை நிர்ணயம் கொண்டவைகளாக இல்லை. இதற்கு காரணம் - உலகளாவிய பொருளாதார மந்தநிலையே காரணமாக இருக்கலாம்!

இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால்.?

இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால்.?

மிகவும் எதிர்பார்க்கப்பட்டபடியே, புதிய ஐபோன் 14 சீரீஸ் அறிமுகமான வேகத்தில் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்கள் மீது அதிகாரப்பூர்வமாக விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடம் பழமையான ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி மாடல்களின் தற்போதைய விலை என்ன? ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் விலைக்குறைப்பு, தேர்ட் பார்ட்டி விற்பனையாளர்களை விட அதிகமாக உள்ளதா? குறைவாக உள்ளதா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

iPhone 13-இன் புதிய விலை!

iPhone 13-இன் புதிய விலை!

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 13 மாடலை தற்போது ரூ.69,900 க்கு விற்பனை செய்கிறது. அதாவது அறிமுக விலையை விட ரூ.10,000 என்கிற குறைவான விலைக்கு பட்டியலிட்டுள்ளது.

உடன் ஐபோன் 13 மினி மாடலின் மீது ப்ரைஸ் கட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்புகளுக்கு பின்னர் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது என்கிற பட்டியல் இதோ!

iPhone 13 Mini-யின் புதிய விலைகள்:

iPhone 13 Mini-யின் புதிய விலைகள்:

ஐபோன் 13 மினி 128 ஜிபி - ரூ 64,900
ஐபோன் 13 மினி 256 ஜிபி - ரூ 74,900
ஐபோன் 13 மினி 512 ஜிபி - ரூ 94,900

ஐபோன் 13 மாடலின் புதிய விலைகள்:

ஐபோன் 13 மாடலின் புதிய விலைகள்:

ஐபோன் 13 128 ஜிபி - ரூ 69,900
ஐபோன் 13 256 ஜிபி - ரூ 79,900
ஐபோன் 13 512 ஜிபி - ரூ 99,900

iPhone 12 மீதும் விலைக்குறைப்பு!

iPhone 12 மீதும் விலைக்குறைப்பு!

ஆம்! ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மாடலின் விலையையும் குறைத்துள்ளது. iPhone 12 ஆனது இப்போது ரூ.59,900 முதல் வாங்க கிடைக்கிறது. அதே நேரத்தில் iPhone 12 Mini நிறுத்தப்பட்டுள்ளது

நினைவூட்டும் வண்ணம், ஐபோன் 12 மினியின் விலை ரூ.64,900 ஆக இருந்தது, மறுகையில் உள்ள ஐபோன் 12 ஆனது ரூ.69,900 க்கு வாங்க கிடைத்தது.

இதெல்லாம் ஒரு தள்ளுபடியா?

இதெல்லாம் ஒரு தள்ளுபடியா?

ஆப்பிள் அறிவித்துள்ள இந்த அதிகாரப்பூர்வமான விலைக்குறைப்புகள் உங்களின் ஆர்வத்தை தூண்டுகிறது என்றால்.. கொஞ்சம் பொறுங்கள்!

ஏனெனில், இதெல்லாம் பெரிய தள்ளுபடிகளே அல்ல. காரணம் - மூன்றாம் தரப்பு ரீசெல்லர்கள் இதை விட அதிகமான சலுகைகளை வழங்குகின்றன; எடுத்துக்காட்டிற்கு ஐபோன் 13 மாடலை ரூ.65,000 க்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர்.

வரும் பண்டிகை காலத்தில்.. விலை இன்னும் குறையும்!

வரும் பண்டிகை காலத்தில்.. விலை இன்னும் குறையும்!

பிரபல இகாமர்ஸ் வலைத்தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் - நடக்கவிருக்கும் பண்டிகை கால விற்பனையின் போது - ஐபோன் 13 மீது மேலதிக தள்ளுபடிகளை நாம் எதிர்பார்க்கலாம்.

இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் ஐபோன் 13 மீது ரூ.15,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்படலாம். எனவே ஆப்பிள் ஸ்டோர் வழியாக அணுக கிடைக்கும் ரூ.10,000 என்கிற அதிகாரப்பூர்வ தள்ளுபடியை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது!

iPhone 14 சீரீஸின் விலைகள் எப்படி?

iPhone 14 சீரீஸின் விலைகள் எப்படி?

ஐபோன் 14 - ரூ.79,900
ஐபோன் 14 பிளஸ் - ரூ. 89,900.
ஐபோன் 14 ப்ரோ - ரூ.1,29,900
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,39,900

இந்த மாடல்கள் அனைத்துமே ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்பிளால் அங்கீகரிக்கப்பட்ட ரீசெல்லர்கள் வழியாக விற்பனை செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Price cut Alert Apple Officially Reduced Prices of iPhone 13 iPhone 12 After iPhone 14 India Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X