மொத்தம் 8 போன்கள்! இதுக்கு மேல விலை குறையாது; சரியான வாய்ப்பு!

|

"இந்த மாதம்.. ஆகஸ்ட் மாதம் அல்ல; விலைக்குறைப்பு மாதம்" என்று கூறும் அளவிற்கு பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது ஏகபோகமான விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டன.

"என்னது பல போன்கள் மீது Price Cut-ஆ? ஒன்னு ரெண்டு மாடல்கள் மட்டும் தானே என் கண்ணுல பட்டது!" என்று கூறுபவரா நீங்கள்? ஆம் எனில், ஆகஸ்ட் 2022-இல் விலைக்குறைப்புகளை பெற்ற 8 ஸ்மார்ட்போன்களின் ஃபுல் லிஸ்ட்!

சுமாரான ஸ்மார்ட்போன்கள் மீது அல்ல.. சூப்பரான மாடல்கள் மீதும்!

சுமாரான ஸ்மார்ட்போன்கள் மீது அல்ல.. சூப்பரான மாடல்கள் மீதும்!

இந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில், மிகவும் சுமாரான, பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமே விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு!

சில சிறந்த ஸ்மார்ட்போன்களின் மீதும் விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக ஒரு நல்ல ஸ்மார்ட்போனை சற்றே குறைத்த விலைக்கு வாங்க இது சரியான நேரம் என்றே கூறலாம்.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு ப்ரைஸ் கட் அறிவிக்கப்பட்டுள்ளது என்கிற பட்டியல் இதோ!

OnePlus-இன் இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மீது 3-வது முறையாக விலைக்குறைப்பு!OnePlus-இன் இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மீது 3-வது முறையாக விலைக்குறைப்பு!

01. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G)

01. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G)

நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் நிறுவனத்தின் Nord CE 2 Lite 5G ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று 6GB RAM மற்றும் மற்றொன்று 8GB RAM ஆகும்.

பழைய விலை Vs புதிய விலை:

பழைய விலை Vs புதிய விலை:

அறிமுகமான நேரத்தில் இவைகள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.21,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.1000 என்கிற விலைக்குறைப்பு அணுக கிடைக்கிறது. ஆக இப்போது மேற்கண்ட RAM ஆப்ஷன்களை முறையே ரூ.18,999 மற்றும் ரூ.20,999 க்கு வாங்கலாம்.

2 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த 10 Samsung போன்களும் தான் லாயக்கி!2 நாள் பேட்டரி லைஃப் வேணும்னா.. இந்த 10 Samsung போன்களும் தான் லாயக்கி!

02. சாம்சங் கேலக்ஸி எஃப்42 (Samsung Galaxy F42)

02. சாம்சங் கேலக்ஸி எஃப்42 (Samsung Galaxy F42)

சாம்சங் நிறுவனத்தின் Galaxy F42 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் என்கிற இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் கூட Samsung நிறுவனம் இதன் 6GB RAM ஆப்ஷன் மீது மட்டுமே விலைகுறைப்பை அறிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஃப்42 மீது ரூ.3000 என்கிற நம்ப முடியாத விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது!

03. சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி (Samsung Galaxy A53 5G):

03. சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி (Samsung Galaxy A53 5G):

இப்போது சாம்சங் Galaxy A53 5G ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் ஆப்ஷனை ரூ.34,999 க்கு பதிலாக ரூ.31,999 க்கு வாங்கலாம். அதே போல 8ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது இப்போது ரூ.32,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் நான்கு கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்: Awesome Black, Awesome Blue, Awesome Peach மற்றும் Awesome White.

Camera Phone-னு வாங்குனா இதை வாங்கணும்; இல்லனா போட்டோவே எடுக்க கூடாது!Camera Phone-னு வாங்குனா இதை வாங்கணும்; இல்லனா போட்டோவே எடுக்க கூடாது!

04. சாம்சங் கேலக்சிஸி ஏ03 (Samsung Galaxy A03)

04. சாம்சங் கேலக்சிஸி ஏ03 (Samsung Galaxy A03)

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Galaxy A03 ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

பழைய விலை Vs புதிய விலை

பழைய விலை Vs புதிய விலை

விலைக்குறைப்பிற்கு பின்னர், ரூ.10,499க்கு அறிமுகப்படுத்தப்பட்ட 3ஜிபி ரேம் ஆனது ரூ.9,514 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் 4ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.11,014 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆமா.. Nothing Phone 1-க்கு இப்போ இது ஒன்னு தான் குறைச்சல்.. அட போங்கப்பா!ஆமா.. Nothing Phone 1-க்கு இப்போ இது ஒன்னு தான் குறைச்சல்.. அட போங்கப்பா!

05. சாம்சங் கேலக்ஸி எஃப்22 (Samsung Galaxy F22)

05. சாம்சங் கேலக்ஸி எஃப்22 (Samsung Galaxy F22)

சாம்சங் நிறுவனத்தின் Galaxy F22 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை இப்போது ரூ.10,499 க்கு வாங்கலாம், அதே சமயம் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை ரூ.12,499 க்கு வாங்கலாம். அதாவது இந்த ஸ்மார்ட்போன் ரூ.2,000 என்கிற விலைகுறைப்பை பெற்றுள்ளது.

06. விவோ வி23இ 5ஜி (Vivo V23e 5G)

06. விவோ வி23இ 5ஜி (Vivo V23e 5G)

விவோ நிறுவனத்தின் V23e 5G ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது. தற்போது இது ரூ.24,990 க்கு வாங்க கிடைக்கிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் புதிய விலை ஆகும்.

07. விவோ ஒய்21டி (Vivo Y21T)

07. விவோ ஒய்21டி (Vivo Y21T)

விவோ Y21T மாடலின் மீது ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இப்போது ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கிறது!

YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ YouTube-ல நிறைய Shorts பார்ப்பீங்களா? அப்போ "இதுக்கும்" ரெடி ஆகிக்கோங்க!

08. ஒப்போ ரெனோ 7 ப்ரோ (Oppo Reno 7 Pro)

08. ஒப்போ ரெனோ 7 ப்ரோ (Oppo Reno 7 Pro)

நினைவூட்டும் வண்ணம், ஒப்போ நிறுவனத்தின் Reno 7 Pro ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் 2021 இல் ரூ.39,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ரூ.36,999 க்கு விற்கப்படுகிறது. அதாவது ரூ.3,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது .

விலைக்குறைப்பிற்கு பின்னரும்.. இவைகளை நம்பி வாங்கலாமா?

விலைக்குறைப்பிற்கு பின்னரும்.. இவைகளை நம்பி வாங்கலாமா?

மேற்கண்ட ஸ்மார்ட்போன்கள் எல்லாமே விலைக்கு ஏற்ற அம்சங்களை வழங்கும் மாடல்கள் தான் என்பதால், நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு இருந்தால், இந்த 8 போன்களில் ஒன்றை வாங்குவதற்கு இதுவே சிறந்த நேரம் ஆகும்!

Best Mobiles in India

English summary
Price Cut Alert 8 Smartphones From OnePlus Samsung Vivo Oppo Now Available at Lower Price. Check Full List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X