விரைவில் வரும் மோட்டோ எம்டி 870 சிறப்பு பார்வை

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த போன், இந்த ஆண்டு இறுதியில் இந்தியா உள்ளி்ட்ட ஆசிய நாடுகளின் சந்தையில் அறிமுகமாகிறது.
மோட்டோ எம்டி 870 வடிவமைப்பில் பல வேறுபாடுகளை காண்பித்துள்ளது. போனின் கீழ்ப்புறத்தின் முனைகள் மொழுக்கையான வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன், 4 இஞ்ச் கொண்ட அகன்ற தொடுதிரை அப்ளிகேஷன்களை எளிதாக இயக்க உதவுகிறது.
அனைத்து மல்டிமீடியா பொழுதுபோக்கு அம்சங்களையும், மோட்டோ எம்டி- 870. மயூசிக் பிளேயர், வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ப்ளே பேக் உள்ளிட்ட ஹைஎண்ட் ஸ்மார்ட்போன்களில் உள்ள மல்டிமீடியா வசதிகள் உள்ளன.
பின்பக்கம் மற்றும் முகப்பு என இரண்டு பக்கங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முகப்பு கேமரா வீடியோ காலிங் வசதியையும், பின்பக்க கேமரா துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் விதத்திலும் இருக்கிறது.
புளூடூத், வை-பை, கம்ப்யூட்டருடன் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கனெக்டிவிட்டி வசதிகளும் இருக்கிறது.
ஜிபிஆர்எஸ், எட்ஜ், 3ஜியுடன் ஹைஸ்பீடு இன்டர்நெட் வசதி, மோட்டோ எம்டி 870யில் உள்ளது. மேலும், இந்த போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.
மோட்டோ எம்டி 870 சிறப்பம்சங்கள்:
டச்ஸ்கிரீன் டிஸ்பிளே
எல்இடி பிளாஷ் கொண்ட 8 மெகாபிக்செல் கேமரா
ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பேர்டு ஓஎஸ்
புளூடூத் மற்றும் வை-பை கனெக்டிவிட்டி்
ஜாவா சாப்ட்வேர் சப்போர்ட்
720பி வீடியோ ரெக்கார்டிங்
3.5 மிமீ ஆடியோ ஜாக்
நீடித்த உழைப்பு கொண்ட பேட்டரி
அனைத்து அம்சங்களும் ஒருங்கே கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விபரங்களை மோட்டோரோலா இதுவரை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications