ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்

அட்மிரல் எக்ஸ்டி-603 மல்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்ட மொபைல். அட்மிரல் எக்ஸ்டி-603 மொபைல் 3.1 இஞ்ச் திரை வசதி கொண்டது. அதோடு 480 X 640 திரை துல்லியத்தையும் வழங்குகிறது. இந்த மொபைல் டிசம்பர் மாதம் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இது ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்கும் மொபைலாகும். இதில் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 3.5 ஆடியோ ஜேக் வசதியினை அளிக்கிறது.அதோடு மட்டும் அல்லாமல் சிடிஎம்ஏ 800 மற்றும் சிடிஎம்ஏ 1,900 செலுலார் நெட்வொர்க் வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது.டைப் செய்வதற்கு எளிய வகையில் கீயூவர்டி கீபேட் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் மொபைல் வயர்லெஸ் லேன் வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது. இதில் உள்ள 2.0 யூஎஸ்பி போர்ட் வசதியின் மூலம் தகவல்களை நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ பரிமாறிக் கொள்ள முடியும். இதில் 5 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் துல்லியமான புகைப்படத்தையும், வீடியோ ரிக்கார்டிங் சவுகரியத்தையும் பெற முடியும். இதில் ஆப்டிக்கல் சூம் வசதியும் உள்ளது.
இந்த மொபைலில் 1,860 எம்ஏஎச் பவர்புல் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பேட்டரி வசதி கிடைக்கும். இத்தகைய வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்மொபைல் ரூ.24,000 விலைக்கு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications