பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்கள்: 108 எம்பி கேமராவுடன் அறிமுகமான Realme 10 Pro 5ஜி! விற்பனை தேதி இதோ.!

|

ரியல்மி நிறுவனத்தின் Realme 10 Pro+ மற்றும் Realme 10 Pro ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. ரியல்மி நிறுவனம் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என டீஸ் செய்திருந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டுவிட்டது. பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரமாகும்.

5ஜி போன் வாங்க சரியான நேரம்

5ஜி போன் வாங்க சரியான நேரம்

ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்பி பிரதான கேமரா மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் 5ஜி சேவை வழங்கும் நகரங்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் 5ஜி போன் வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். யோசிக்காமல் இந்த 5ஜி போனை வாங்கலாம்.

Realme 10 Pro சிறப்பம்சங்கள்

Realme 10 Pro சிறப்பம்சங்கள்

Realme 10 Pro ஆனது முழு எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. (1,080x2,400 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் 680 nits பிரகாசத்துடன் கூடிய 6.72 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 93.76 சதவீதம் டிஸ்ப்ளே டூ பாடி விகிதம் இருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி

இந்த ரியல்மி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் வரையிலான ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

108 எம்பி பிரதான கேமரா

108 எம்பி பிரதான கேமரா

Realme 10 Pro ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இதில் 108 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமரா ஆதரவுகள் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

Realme 10 Pro ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இது 44 மணிநேரம் வரை இசை கேட்கும் நேரத்தை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் 5ஜி ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம்

8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம்

ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது இரண்டு வேரிண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரியல்மி 10 ப்ரோ ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் இன் இந்திய விலை மதிப்பு ரூ.19,500 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.21,800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்

ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்

டாப் ஆஃப் தி லைன் மாடலாக Realme 10 Pro+ வெளியாகி இருக்கிறது. இதில் 6.7 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் கூடிய 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 2,160Hz பல்ஸ்-வித்த் மாடுலேஷன் (PWM) மற்றும் 800 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது பக்கா ப்ரீமியம் 5ஜி ஸ்மார்ட்போனாகும்.

Realme 10 Pro+ விலை

Realme 10 Pro+ விலை

Realme 10 Pro+ இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,699 (தோராயமாக ரூ.19,500) என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,999 (தோராயமாக ரூ.23,000) மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் CNY 2,299 (தோராயமாக ரூ.26,500) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Premiums Specs Smartphone Available at Budget Price! Realme 10 Pro 5G Launched with 108mp Camera..

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X