Hm மட்டும் சொல்லுங்க நாங்க காத்திருக்கோம்: எதிர்பார்ப்பை எகிறச் செய்த Redmi Note 12 Pro+

|

Redmi Note 12 சீரிஸ் இந்தியாவில் ஜனவரி 5, 2022 அன்று அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நிறுவனம் டீஸர்கள் மூலம் ட்விட்டரில் உறுதி செய்திருக்கிறது. Redmi Note 12 சீரிஸ் இல் Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாவதற்கு முன்னதாக Redmi Note 12 Pro+ குறித்த முக்கிய தகவலை டிப்ஸ்டர் பராஸ் குக்லானி பகிர்ந்துள்ளார்.

Redmi Note 12 Pro+ 5G குறித்து வெளியான தகவலை பார்க்கையில், Redmi Note 12 Pro+ 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆக இருக்கலாம். தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.

Hm மட்டும் சொல்லுங்க: எதிர்பார்ப்பை எகிறச் செய்த Redmi Note 12 Pro+

இந்த தொடர்களில் ப்ரீமியம் அம்சங்களோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ+ 5ஜி இன் விலை மிட்ரேன்ஜ் விலைப் பிரிவைக் கொண்டதாக இருக்கும் என தகவலின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.24,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.26,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.28,999 எனவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

அதேபோல் Redmi Note 12 Pro+ ஆனது ஜனவரி 11 2022 முதல் வாங்குவதற்கு கிடைக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Redmi Note 12 Pro, Redmi Note 12 Pro+: சிறப்பம்சங்கள்

ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ+ ஆகிய ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதன் வடிவமைப்பு ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருக்கும் எனவும் பின்புற கேமரா சதுரமான வடிவில் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தொடரில் உள்ள Note 12 Pro+ இன் பின்புற பேனல் வளைந்த வடிவில் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 1.5k தெளிவுத்திறன் ஆதரவுடன் கூடிய பிளாட் 6.67-இன்ச் 10-பிட் OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு, 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதம், HDR10+ மற்றும் டால்பி விஷன் ஆதரவுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் உச்ச பிரகாச நிலையைக் கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட் மூலம் இயக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது டைமன்சிட்டி 920 எஸ்ஓசி இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இந்த தொடர் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதன் நோட் 12 ப்ரோ மாடலில் OIS ஆதரவுடன் கூடிய 50MP Sony IMX766 கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. அதேபோல் இதன் நோட் ப்ரோ+ மாடலில் OIS ஆதரவுடன் உடன் கூடிய சாம்சங் 200 MP ISOCELL HPX கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இதன் Note 12 Pro மாடலில் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் Note 12 Pro+ இல் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Premium Specs Smartphones at Budget Price: Redmi Note 12 Pro+ Price Details Leak Ahead of Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X