அறிமுகத்துக்கே முன்பே ஆர்டர்: மோட்டோரோலா எட்ஜ் எஸ் சிறப்பம்சங்கள் இதோ!

|

மோட்டோரோலா நிறுவனம் ஜனவரி 26 ஆம் தேதி மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அறிமுகத்துக்கே முன்பே இந்த ஸ்மார்ட்போன் ஆர்டர் தொடங்கப்பட்டுள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனம் ஜனவரி 26 ஆம் தேதி மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய நேரப்படி இரவு 5:00 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக ஆர்டர்களுக்கு ஜே.டி.காம்-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முறையான விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி சிப்செட்

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் முதன்மை ரகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் படம் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் என டீசர்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் சமீபத்திய சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போனாகும்.

வடிவமைப்பு விவரங்கள்

வரவிருக்கும் ஸ்மார்ட்போன் முதன்மை ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் வெய்போவின் சமீபத்திய படங்களின்படி பின்புறத்தில் பளபளப்பான வெள்ளை பூச்சுகளுடனும், மேல் இடது மூலையில் செவ்வக வடிவ கேமரா அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ரெசல்யூஷன், 105 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. அதேபோல் பஞ்ச் ஹோல் வடிவமைப்புடன் இரட்டை முன்புற கேமராவை கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

மோட்டோரோலா எட்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என இரண்டு வகைகளில் கிடைக்கும். அதோடு சில சேமிப்பு வேரியண்ட்களில் மாறுபடும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரதான கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளிட்ட குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் முன்பக்கத்தில் 16 எம்பி பிரதான செல்பி கேமரா மற்றும் 8 எம்பி இரண்டாம் நிலை கேமராவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Pre-Ordering of Motorola Edge S Smartphone Started Before its Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X