Home
Mobile

ப்ரீ-ஆர்டரில் புதிய சோனி ஸ்மார்ட்போன்!

By Super
ப்ரீ-ஆர்டரில் புதிய சோனி ஸ்மார்ட்போன்!

சமீபத்தில் நிறைய எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது சோனி. இப்போது புதிய எக்ஸ்பீரியா நியோ எல் என்ற ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டரிலும் பெறலாம்.

இந்த புதிய ஸ்மார்ட்போன் வலைத்தளங்களில் என்ன விலை என்பதற்கும் முன்பு, இதன் தொழில் நுட்ப விவரம் என்ன என்பதையும் பார்க்கலாம். இந்த எக்ஸ்பீரியா நியோ எல் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதில் 4 இஞ்ச் தொடுதிரை வசதியினையும் எளிதாக பெறலாம்.

இந்த அகன்ற திரையின் மூலம் 854 X 480 திரை துல்லியத்தினை பெற முடியும். இதனால் தகவல்களை தெளிவாக பார்க்கலாம். இதில் உள்ள 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் எம்எஸ்எம்-8255 பிராசஸர், இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளம் செயல்பட சிறப்பாக துணை புரியும்.

இந்த ஸ்மார்ட்போனில் 301 எம்பி வரை மெமரி வசதியினை

இலவசமாக பெற முடியும். இதன் மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் செய்கிறது.

எக்ஸ்பீரியா நியோ எல் ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ கேமராவினையும் கொண்டது. இதில் உள்ள 1,500 எம்ஏஎச் பேட்டரி 7.5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 575 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். 7.5 மணி நேரம் டாக் டைம் என்பது சிறப்பான விஷயம் தான்.

3ஜி, வைபை போன்ற தொழில் நுட்ப வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் அற்புதமாக வழங்கும். இதனால் கூகுள் வாய்ஸ் சர்ச், கூகுள் டாக் போன்ற பல வசதிகளை இதில் பயன்படுத்த முடியும். சோனி நிறுவனத்தின் இந்த எக்ஸ்பீரியா நியோ எல் என்ற புதிய ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் வெள்ளை என்று கண் கவரும் வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் ஆன்லைனில் சோனி எக்ஸ்பீரியா நியோ எல் ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டர் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் வலைத்தளங்களில் ரூ. 18, 499 விலை கொண்டது. இன்னும் நிறைய வலைத்தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 18,000 விலையில் கிடைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X