Home
Mobile

பட்ஜெட் விலை.. ஆனால் பவர்ஃபுல் அம்சங்கள்.. அறிமுகத்திற்கு ரெடியான அடுத்த OnePlus போன்!

சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் 11ஆர் ஆகிய இரண்டுமே உங்கள் பர்ஸில் ஓட்டை போடும் அளவிலான விலை நிர்ணயத்தை பெற்றுள்ளதென்று நினைக்கிறீர்களா? ஆமெனில் பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் அம்சங்களை பேக் செய்யும் இந்த ஒன்பிளஸ் போன் உங்களுக்கானதாக இருக்கலாம்!

நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது ஒன்பிளஸ் நோர்ட் 2 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் 2டி (OnePlus Nord 2 & OnePlus Nord 2T) ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் விலையில் அறிமுகத்திற்கு ரெடியான அடுத்த OnePlus போன்!

ஒன்பிளஸ் நோர்ட் 3 - வெறும் பட்ஜெட் போன் அல்ல.. பவர்ஃபுல் பட்ஜெட் போன்!

ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸின் கீழ் உள்ள மற்ற மாடல்களை போலின்றி, ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடலானது வெறுமனே ஒரு "பட்ஜெட் விலை ஒன்பிளஸ் போன்" ஆக மட்டுமில்லாமல், பவர்ஃபுல் அம்சங்களை பேக் செய்யும் ஒரு பட்ஜெட் விலை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாகவும் இருக்க உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 3 இல் அப்படி என்ன பவர்ஃபுல் அம்சங்கள் இடம்பெறும்?

ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனானது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 900 (MediaTek Dimensity 9000) சிப்செட் உடனாக 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்படலாம்.

இந்த போனில் ஸ்டோரேஜை எக்ஸ்டெண்ட் செய்யக்கூடிய விருப்பம், அதாவது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இடம்பெறாமல் போகலாம் என்பது போல் தெரிகிறது. இருப்பினும் இதில் ஒன்பிளஸ் 11 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம் மற்றும் அதில் 50MP மெயின் சென்சார் + 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2MP மேக்ரோ சென்சார் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா இருக்கலாம். ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனில் 80W சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 3 - இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகமாகும்?

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.27,999 ஆக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் இந்திய விலையும் கூட ரூ,27,999 தான். இது க்ரீன் மற்றும் க்ரே என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வெளியானது.

ஒன்பிளஸ் நோர்ட் 3 - எப்போது அறிமுகமாகும்?

சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு இடையே நடக்கலாம். நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸின் முதல் ஜெனரேஷன் ஸ்மார்ட்போன் ஜூலை 2020 இல் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Powerful Specifications in Budget Price OnePlus Next Smartphone Nord 3 To Launch in India Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X