Home
Mobile

அவசரப்பட்டு எந்த போனையும் வாங்காதீங்க: மே 23 வரை காத்திருங்கள்.. வருகிறது பிரம்மாண்ட Motorola 5ஜி போன்.!

விவோ, ஒன்பினஸ் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அருமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக மோட்டோரோலா நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் வசதியுடன் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் மோட்டோரோலா எட்ஜ் 40 எனும் ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்தது. இந்நிலையில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது வரும் மே 23-ம் தேதி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 40 போன் அறிமுகம் செய்யப்படுகிறது.

 மே 23 வரை காத்திருங்கள்.. வருகிறது பிரம்மாண்ட Motorola 5ஜி போன்.!

குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இப்போது மோட்டோரோலா எட்ஜ் 40 போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி வளைந்த pOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.

மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும். 8ஜிபி ரேம் மறறும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 40.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். வீடியோ எடிட்டிங் ஆப், கேமிங் ஆப் உள்ளிட்ட அனைத்தையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன்.

50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 மாடல்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன். பின்பு டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 மாடல். மேலும் இந்த போனின் எடை 167 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனின் விலை EUR 599.99 (இந்திய மதிப்பில் ரூ.54,000). பின்பு இந்த போன் எக்லிப்ஸ் பிளாக், லூனார் ப்ளூ மற்றும் நெபுலா க்ரீன் நிறங்களில் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
powerful Motorola Edge 40 phone will be launched in India on May 23 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X