POVA ஒரே போடு.. ஆக.18-க்கு அப்புறம் இதுதான்.. 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளேவுடன் போவா 8 ப்ரோ (POVA 8 Pro) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை டெக்னோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேட்ரிக்ஸ் டிஸ்பிளே மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 6500mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்க இருக்கிறது.
போவா 8 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இப்போது, ப்ரோ மாடல் வெளியீட்டுக்கு ரெடியாகிவிட்டது. வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதன் விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. இருப்பினும், குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே வந்துவிட்டதால், பீச்சர்களை தெரிந்து கொள்ள முடியும்.

போவா 8 ப்ரோ அம்சங்கள் (POVA 8 Pro Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultimate 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்ம் மாலி ஜி615 எம்சி2 (Arm Mali G615 MC2) ஜிபியு கிடைக்கிறது. ஹைஓஎஸ் 16 (HiOS 16) கிடைக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.78 (2644 x 1208 பிக்சல்கள்) ஹைப்பர்லக்ஸ் அமோலெட் (HyperLux AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 700 நிட்ஸ் நார்மல் பிரைட்னஸ் மற்றும் 1600 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது.
மேலும், 429 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 13 எம்பி ஃப்ரண்ட் கேமராவை இந்த போவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த டூயல் கேமரா செட்டப்புக்கு பக்கத்தில் அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே (Alive Matrix Display) கொடுக்கப்பட்டு உள்ளது. 6500mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர் சார்ஜ் (Super Charge) கொண்ட மாடலாக இந்த போவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.39 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. ஆகவே, ஸ்லிம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு பக்காவாக இருக்கும்.
மேலும், 189 கிராம் எடை கொடுத்துள்ளது. ஆம்பியன் லைட் சென்சார் (Ambient Light Sensor), ஹார்டுவேர் லெவல் கைரோஸ்கோப் (Gyroscope) மற்றும் இன்பிராரெட் ரிமோட் கன்ட்ரோல் (Infrared Remote Control) கிடைக்கிறது. மேலும், அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Under-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது.
ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (BT 5.4), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) கிடைக்கிறது. இதே பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் வெளியான போவா 8 5ஜி போனின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. ஆகவே, இந்த ப்ரோ மாடலானது ரூ.35000 பட்ஜெட்டில் வரலாம்.


Click it and Unblock the Notifications