நாளை விற்பனைக்கு வரும் புதிய போவா 5ஜி போன்.. IP69K ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
சமீபத்தில் போவா 8 ப்ரோ 5ஜி (POVA 8 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது டெக்னோ நிறுவனம். இந்த புதிய போன் நாளை முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்க முடியும். இப்போது போவா 8 ப்ரோ 5ஜி போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விலை மற்றும் சலுகைகள்: 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட போவா 8 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. மேலும் இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.54,999-ஆக உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.46,999 விலையில் வாங்கிவிட முடியும்.

போவா 8 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POVA 8 Pro 5G Specifications): தரமான ஆக்டாகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultimate 4nm) சிப்செட் உடன் இந்த புதிய போவா 5ஜி போன் வெளியாகி உள்ளது. கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.
அதேபோல் 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் போவா 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2644 × 1208 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன.
குறிப்பாக HiOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் போவா 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
அதுவும் 50எம்பி Sony LYTIA 700c மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் போவா 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த புதிய போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன.
போவா 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வெளியாகி உள்ளது. இதுதவிர எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்ட ராணுவ தர சான்றிதழைப் பெற்றுள்ளது இந்த புதிய போவா போன்.
அதேபோல் இந்த போனின் பின்புறம் அலைவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே வசதியும் உள்ளது. பேட்டரி அளவுகள், செயலில் உள்ள டைமர்கள், நோட்டிபிகேஷன் மற்றும் ஸ்பேம் கால் அழைப்புகள் என அனைத்தும் இந்த டிஸ்பிளேவில் தெரியும். 6500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வெளியாகி உள்ளது.
மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத்5.4, என்எப்சி, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஆர்க் ஒயிட், கிராஃபைட் பிளாக் மற்றும் கிரீன் ஆகிய கலர்களில் இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications