Home
Mobile

தர லோக்கலுக்கு இறங்கிய Google.. ஒன்பிளஸ், சாம்சங் வயிற்றில் புளி.. Pixel 7a, Pixel Fold போனின் விலை அப்படி!

போட்டி போட வேண்டுமென்றால்.. போட்டியாளர்களுக்கு இணையாக களமிறங்க வேண்டும் என்பதை கூகுள் (Google) உணர்ந்துள்ளது போல் தெரிகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள பிக்சல் ஃபோல்ட் (Google Pixel Fold) மற்றும் பிக்சல் 7ஏ (Pixel 7a) போன்களின் லீக்டு விலை விவரங்களை (Leaked Price Details) பார்க்கும் போது அப்படித்தான் தெரிகிறது!

இந்த 2023 ஆம் ஆண்டில் கூகுளிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போன் உள்ளதென்றால் அது கூகுளின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான பிக்சல் ஃபோல்ட் தான். இதனுடன் பிக்சல் 7ஏ மாடலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த 2 போன்களும் வருகிற மே 10 ஆம் தேதி நடக்கும் கூகுள் ஐ/ஓ (Google I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் Pixel 7a, Pixel Fold: எப்போது, என்ன விலைக்கு அறிமுகமாகும்?

இதற்கிடையில் ரீடெயில் சோர்ஸ் (Retail Source) வழியாக கிடைத்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி 9டூ5கூகுள் (9to5Google) வலைத்தளமானது கூகுள் பிக்சல் 7ஏ மற்றும் பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன்களின் சாத்தியமான விலை விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. கூடவே இவ்விரு போன்களின் கலர் ஆப்ஷன்களும் ஆன்லைனில் கசிந்துள்ளன.

9டூ5கூகுளின் அறிக்கையின்படி, கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனானது அமெரிக்காவில் 499 அமெரிக்க டாலர்களுக்கு அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.40,900 க்கு வெளியாகலாம். இந்த விலை பிக்சல் 7ஏ மாடலின் "முன்னோடியான" பிக்சல் 6ஏ மாடலை விட சுமார் ரூ.4,100) அதிகமாகும்.

இருப்பினும், பெரும்பாலான ஒன்பிளஸ் போன்கள் ரூ.40,000 என்கிற பட்ஜெட்டில் தான் வாங்க கிடைக்கின்றன என்பதால் பிக்சல் 7ஏ மாடல் ஒரு நல்ல போட்டியாக இருக்குமென்று நம்பலாம். மறுகையில் உள்ள பிக்சல் ஃபோல்ட்டின் விலை நிர்ணயமானது சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போன்களை குறிவைப்பது போல் தெரிகிறது.

கூகுள் பிக்சல் ஃபோல்டின் விலை சுமார் $1,300 முதல் $1,500 க்குள் இருக்கலாம். அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.1,07,400 முதல் ரூ. 1,23,935 க்குள் இருக்கலாம். அதாவது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4 (Samsung Galaxy Z Fold 4) ஸ்மார்ட்போனை விட பிக்சல் ஃபோல்ட் மலிவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்களை பொறுத்தவரை, பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனானது 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் 64எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ராவைட் கேமராவை பேக் செய்யலாம். மேலும் இது பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ சீரீஸில் பயன்படுத்தப்படும் அதே டென்சர் ஜி2 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். கடைசியாக இது வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டிருக்கலாம்.

பிக்சல் 7ஏ மாடலானது சார்கோல், ஸ்னோ, சீ (வெளிர் நீலம்) மற்றும் கோரல் என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் வரும் என்று கூறபப்டுகிறது. குறிப்பாக கடைசி கலர் ஆப்ஷன் கூகுள் ஸ்டோரில் மட்டுமே வாங்க கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. பிக்சல் ஃபோல்டை பொறுத்தவரை, அம்சங்கள் குறித்த விவரங்கள் இல்லை; ஆனால் பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
possible price details of google pixel fold and pixel 7a which expected to launch on may 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X