Home
Mobile

மார்கெட்டே மிரண்டுடுச்சு.. OLED டிஸ்பிளே.. 100W சார்ஜிங்.. 24GB ரேம்.. 200MP கேமரா.. 100X ஜூமிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான டிசைன் மட்டுமல்லாமல், மூக்கில் விரல் வைக்கும்படியான பீச்சர்களுடன் போர்ஷே டிசைன் ஹானர் மேஜிக்7 ஆர்எஸ்ஆர் (Porsche Design HONOR Magic7 RSR) மாடலானது குளோபல் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. டிஸ்பிளே, கேமரா, ரேம், பேட்டரி போன்ற அனைத்திலும் ஆல்-ரவுண்ட் பிரீமியமாக இருக்கிறது. இந்த பீச்சர்களுக்கு ஏற்ப விலையும் அல்ட்ரா பிரீமியமாக இருக்கிறது. சீனாவில் ஏற்கனவே வெளியாகியது. இப்போது, குளோபல் மார்கெட்டுக்கு வந்துள்ளதால், மற்ற நாடுகளிலும் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போர்ஷே ஆர்எஸ்ஆர் காரை பற்றி சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. பலரது கனவு கார்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. இவர்களை அப்படியே தட்டித் தூக்குவதற்காக போர்ஷே-ஸ்டைல் பீக் லைன்கள் மற்றும் ஹெக்சாகோனசோல் டிசைனில் இந்த ஹானர் மேஜிக்9 ஆர்எஸ்ஆர் வெளியாகி இருக்கிறது. அந்த காரை போலவே பீச்சர்களில் அல்ட்ராவுக்கு மேல் அல்ட்ராவை காட்டி இருக்கிறது.

மார்கெட்டே மிரண்டுடுச்சு.. OLED டிஸ்பிளே.. 100W சார்ஜிங்.. 24GB ரேம்!

ஹானர் ஆன்டி ஸ்க்ராட்ச் நானோ கிரிஸ்டல் சீல்டு (HONOR Anti-scratch Nano Crystal Shield) புரொடெக்சன் மற்றும் 10X டிராப் & ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ட் கொண்ட டிஸ்பிளே கிடைக்கிறது. IP69 மற்றும் IP68 வாட்டர் ரெசிஸ்டன் உள்ளது. ஆகவே, டிசைனில் மிரட்டிவிட்டாச்சு என்றே சொல்ல வேண்டும். இப்போது, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி, கேமரா பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

இந்த ஹானர் போனில் 6.8 இன்ச் (1280 × 2800 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. குவாட் கர்வ்ட் (Quad Curved) டிசைனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 453 பிபிஐ டென்சிட்டி, 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், வழக்கமான 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்1பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது.

24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட மாடல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) சிப்செட் வருகிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் எலைட் லெவலுக்கு இருக்கும். மேலும், அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு, மேஜிக் யுஐ 9.0 (Magic UI 9.0) உள்ளது.

இந்த போர்ஷே டிசைன் ஹானர் மேஜிக்7 ஆர்எஸ்ஆர் மாடலில் 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 100X டிஜிட்டல் ஜூமிங் கொண்ட 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் டூயல் எலெக்ட்ரோமேக்னெட்டிக் மோட்டார்கள் (Dual Electromagnetic Motors) கிடைக்கின்றன. மேலும், 50 எம்பி சூப்பர் டைனாமிக் ஹானர் பால்கன் கேமரா வருகிறது.

இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், LOFIC டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் எச்டி மேக்ரோ சப்போர்ட் உள்ளது. 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 3டி டெப்த், 4K ஷூட் மற்றும் ஏஐ ஆன்டி-டிசோர்சன் கிடைக்கிறது. ஏஐ மோஷன் சென்சிங் கேப்ச்சர், ஏஐ ராவ் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது.

இதுபோல சாம்சங் மற்றும் ஆப்பிளின் பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் ஏஐ டிரான்ஸ்லேஷன், ஏஐ பிரைவசி கால், ஏஐ டூயல் நாய்ஸ் கன்ட்ரோல் போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. ஹானர் சரவுண்ட் சப்வூப்பர் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஹானர் மேஜிக்7 ஆர்எஸ்ஆர் போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

இந்த சார்ஜிங்குக்கு 5850mAh பேட்டரி கிடைக்கிறது. கிளாசிக் அகேட் (Agate) மற்றும் கிரே (Grey) கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பிரீமியம் போனின் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 1,60,250ஆக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது, ஐரோப்பிய மார்கெட்டில் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Porsche Design HONOR Magic7 RSR With 200MP Camera 100W Charging Goes Global Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X