சீனாவில் இருந்து வரும் பொங்கல் பரிசு.. சரியாக ஜனவரி 10 அன்று களமிறங்கும் உலகின் வேகமான 5G Phone!

|

சரியாக பொங்கல் (Pongal) திருநாளிற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னதாக, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று ஒரு 'மாஸ்' ஆன ஸ்மார்ட்போன்; அதுவும் 5ஜி ஆதரவு கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போது, அதை பொங்கல் பரிசு என்று குறிப்பிடுவது ஒரு பெரிய பிழையாக இருக்காது என்று நம்புகிறோம். ஏனென்றால்..?

வருகிற 2023 ஆம் ஆண்டில் டிவி வாங்க வேண்டும்; வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்து இருப்பவர்களை விட, ஒரு தரமான 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்து இருப்பவர்களே இங்கு அதிகம்! போதாக்குறைக்கு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டுமே போட்டிபோட்டுக்கொண்டு 5ஜி சேவைகளை (நாடெங்கும்) விரிவுபடுத்தி வருகிறது. ஆகையால்..?

ஜனவரி 10 அன்று இந்தியாவில் அறிமுகமாகும் உலகின் வேகமான 5G Phone!

அடுத்த சில வாரங்களில் அறிமுகமாகும் எல்லா வகையான 5ஜி ஸ்மார்ட்போன்களுமே நமக்கான பொங்கல் பரிசு தான். ஆனால் நாங்கள் இங்கே குறிப்பிடும் பொங்கல் பரிசானது சீனாவில் இருந்து வரும் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். அது ஐக்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஐக்யூ 11 5ஜி (iQOO 11 5G) ஆகும். iQOO நிறுவனத்தின் கூற்றுப்படி, இது "இந்தியாவிற்கு வரும் உலகின் அதிவேகமான ஸ்மார்ட்போன்" ஆகும். ஏனென்றால்.?

சமீபத்தில் அறிமுகமான குவால்காமின் (Qualcomm) ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். நினைவூட்டும் வண்ணம், மற்றொரு சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி (Xiaomi) தனது ரெட்மி நோட் 12 சீரீஸ் (Redmi Note 12 Series) ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட்டை தான் பேக் செய்துள்ளது. ஆனாலும் கூட ஐக்யூ நிறுவனத்தின் "ஓவர் கான்ஃபிடென்ஸை" பாராட்டியே ஆக வேண்டும்! ஏனென்றால்..?

ஜனவரி 10 ஆம் தேதியன்று ஐக்யூ நிறுவனம் ஒரே ஒரு ஸ்மார்ட்போனை மட்டுமே அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது ஐக்யூ 11 சீரீஸின் கீழ் ப்ரோ மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படாது; மாறாக ஐக்யூ 11 5ஜி மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்படும். இருப்பினும் இந்த சிங்கிள் மாடலே பல சம்பவங்களை செய்யும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால், ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அப்படி! இது ஏற்கனவே மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால், iQOO 11 5G-யின் அம்சங்கள் எங்களுக்கு அத்துப்படி!

முன்னரே குறிப்பிட்டபடி, ஐக்யூ 11 ஆனது உடன் Snapdragon 8 Gen 2 சிப்செட்டை பேக் செய்யும். மேலும் இது 6.78-இன்ச் அளவிலான E6 AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இதன் டிஸ்பிளே 144Hz (வரையிலான) ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் QuadHD+ ரெசல்யூஷன் போன்ற பிரீமியம் அம்சங்களையும் கொண்டு வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50MP மெயின் கேமரா + 13MP கேமரா + 8MP கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 16MP செல்பீ கேமரா உள்ளது!

5000mAh பேட்டரி உடன் வரும் iQOO 11 5G ஸ்மார்ட்போன் ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் வழங்கும். கடைசியாக, ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்ற தீமிங் செட்டிங்ஸ்களுடன் அப்டேட் செய்யப்பட்ட நிறுவனத்தின் சொந்த FunTouch இன்டர்பேஸை கொண்டு இயங்கும். டிசைனை பொறுத்தவரை - வழக்கம் போல - பிஎம்டபுள்யூ எம் மோட்டார்ஸ்போர்ட்டால் (BMW M motorsport) ஈர்க்கப்பட்ட வடிவமைப்பை கொண்டுள்ளது. அதாவது பின்பக்கத்தில் ரேஸிங் ஸ்ட்ரைப்ஸ் மற்றும் பெரிய கேமரா ஹம்ப் ஆகியவைகள் உள்ளன. இருப்பினும், கிளாஸிற்கு பதிலாக, வேகன் லெதர் ஃபினிஷ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதெல்லாம் சரி.. இது என்ன விலைக்கு வரும்?

ஐக்யூ 11 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் (India Price) பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. ஆனாலும் கூட இது ரூ.50,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இது ரூ.44,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான வேகத்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகமாக உள்ளதால் இரண்டிற்கும் இடையே கடும் போட்டி ஏற்படலாம். அறியாதோர்களுக்கு OnePlus 11 5G ஆனது 2023 ஆம் ஆண்டு பிப்.7 ஆம் தேதியன்று அறிமுகமாக உள்ளது!

Best Mobiles in India

English summary
Pongal 2023 New 5G Smartphone Launch iQOO To Introduced World Fastest Phone In India On January 10

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X